VTK: சிம்புவா இது...கோட் சூட், தாடி என ஆளே மாறிட்டாரே! சிம்புவின் 360 டிகிரி வீடியோ!
நடிகர் சிம்புவின் ஸ்டைலிஷ் ஆன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கோட் சூட்டில், தாடியுடன் மிக ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார் நடிகர் சிம்பு.
நடிகர் சிம்புவின் ஸ்டைலிஷ் ஆன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கௌதம் வாசுதேவன் என்று இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படக்குழுவினர் ட்விட்டரில் சிம்புவின் 360 டிகிரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் கோட் சூட்டில், பெப்பர் சால்ட் தாடியுடன் மிக ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார் நடிகர் சிம்பு.
Exclusive 360 degree Video of The dapper Stylish ATMAN #SilambarasanTR from #VTKAudioLaunch @SilambarasanTR_ - @menongautham 's #VendhuThanindhathuKaadu in theatres from sep 15th !
— Vels Film International (@VelsFilmIntl) September 8, 2022
An @arrahman Musical
Prod by @VelsFilmIntl @IshariKGanesh
A @RedGiantMovies_ Release pic.twitter.com/teLYJznPMO
ஏற்கனவே கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா , அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை அமைத்துள்ளார். இது சிம்புவின் 47 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
இந்த படத்தில் சிம்பு கிராமத்து இளைஞனாக , மெலிந்த தேகத்துடன் வலம் வருவார் என தெரிகிறது. பொதுவாக GVM படங்கள் என்றாலே வெஸ்டர்ன் , ஆங்கில உரையாடல் , காதல் என பழகிப்போன நமக்கு வெந்து தணிந்தது காடு ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என நம்பலாம். படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்தது. இந்நிலையில் படக்குழுவினர் ட்விட்டரில் சிம்புவின் 360 டிகிரி வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது சிம்பு ஃபேன்ஸ் மத்தியில் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.