”ஹீரோ அஜித்னு தெரியாமத்தான் நடிக்கவே போனேன் “ - சில்மிஷம் சிவா சுவாரஸ்யம் !
”7 மணிக்கு ஃபிளைட் . எனக்கு படம் பெரிய படமா ? சின்ன படமானு தெரியாது. படத்துல நடிக்கணும் அவ்வளவுதான்னு போனேன்.”
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவா. ராப் பாடகரான இவர் , தமிழில் பல ராப் பாடல்களை பாடி கவனம் பெற்றார். அதன் பிறகு கலக்க போவது யார் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு அசத்தலான காமெடி சென்ஸை வெளிப்படுத்தினார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. சிறு வயதில் இருந்தே இவரை சில்மிஷம் சிவா என்றுதான் அழைப்பார்களாம் . காரணம் இவர் செய்யும் சேட்டைகள்தான் என்கின்றார் சிவா. இந்த நிலையில் வலிமை படத்தில் அஜித்துடன் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் விரிவாக பேசியுள்ளார்.
View this post on Instagram
அதில் ”நான் கலக்கப்போவது யாரு பண்ணிக்கொண்டிருந்தேன். ஃபைனலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக ஒரு அழைப்பு வந்தது. அதில் இதுபோல ஒரு படம் நடிக்க வேண்டும் என்றார்கள். எனக்கு மிகவும் சந்தோஷம் , இப்படி கலக்கப்போவது யாரு பண்ணும் பொழுதே வாய்ப்புகள் வருதேனு , உடனே ஒப்புக்கொண்டேன். அதன் பிறகு பார்த்தால் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் என டேட் கொடுத்தாங்க, அன்றைக்குத்தான் எனக்கு கலக்கப்போவது யாரு ஃபைனல்ஸ். படக்குழுவிடன் சொல்லி இரவு வந்துவிடுகிறேன் என்றேன். அதன் பிறகு மாலை 4.30 மணியளவில் கலக்கப்போவது யாரு ஃபைனல்ஸ் முடிஞ்சது. இரண்டாவது பிரைஸ் கொடுத்தாங்க. அந்த சந்தோசத்தை விட படம் நடிக்க போறதுதான் பெரிய ஹாப்பி. அப்போதே விமான டிக்கெட்டையும் மெசேஜில் அனுப்பியிருந்தார்கள். அது என்னவென்றே தெரியாது, எனது நண்பனிடம் கேட்டுதான் விமான டிக்கட்னே புரிஞ்சுக்கிட்டேன். 7 மணிக்கு ஃபிளைட் . எனக்கு படம் பெரிய படமா ? சின்ன படமானு தெரியாது. படத்துல நடிக்கணும் அவ்வளவுதான்னு போனேன். அதன் பிறகு ஏர்போர்ட்டிற்கு போன பிறகுதான் ஹீரோவாது யாருனு சொல்லுங்க என்றேன். அதற்கு அவர் அஜித் சார்னு சொன்னார். அதன் பிறகு சொல்லவா வேண்டும் . அங்கு போனதும் எல்லோரும் தயாரா இருக்காங்க. ஏ.கே உக்காந்து இருக்காரு. என்னோட சீன் அஜித் சாரோடனு சொன்னதும் எனக்கு செம ஹாப்பி. சிவா சார், என்னை அஜித் சார்கிட்ட அறிமுகம் பண்ணாங்க. அவர் வாங்க , நல்லாயிருக்கீங்களானு கேட்டாரு. எனக்கு செம ஹாப்பி ஆயிடுச்சு. அப்படிதான் நான் வலிமை படத்துல நடிச்சேன் “ என்றார் சில்மிசம் சிவா.