மேலும் அறிய

Silambarasan: ‛சிம்பு வெளியேறியதால் நிறுத்தப்பட்டதா ‘பத்துதல’ படப்பிடிப்பு’ -உண்மையை கூறிய இயக்குநர்!

நடிகர் சிலம்பரசன் நடிக்கும்  ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியான அதனை படத்தின் இயக்குநர் கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.     

நடிகர் சிலம்பரசன் நடிக்கும்  ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியான அதனை படத்தின் இயக்குநர் கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.     

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சிம்பு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு வெளியான மாநாடு படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் சமீபத்தில் மஹா படம் வெளியாகியிருந்தது. இதனையடுத்து சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இதில் கௌதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. 

இதனையடுத்து மற்றொரு படமான பத்து தல படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படம் டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்து இருந்தது. 

Silambarasan: ‛சிம்பு வெளியேறியதால் நிறுத்தப்பட்டதா ‘பத்துதல’ படப்பிடிப்பு’ -உண்மையை கூறிய இயக்குநர்!

இதற்கிடையில் உடல் நலக்குறைவால் தந்தை டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால் பத்து தல படத்தின் சிம்புவின் காட்சிகள் படமாக்குவது தாமதமானது.சமீபத்தில் சென்னை திரும்பிய அவர் கடந்த மாத இறுதியில்  ‘பத்து தல’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக பத்து தல படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என இரு புகைப்படங்களை வெளியிட்டு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி சிம்பு அப்டேட் வழங்கினார். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நடைபெற்று வந்த ‘பத்து தல’  படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக இயக்குநர் கிருஷ்ணா சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் உடன் இருக்கும் புகைப்படங்களை வெ ளியிட்டார்.

இதனிடையே சிலம்பரசன் ஷூட்டிங்கில் இருந்து பாதியில் கிளம்பியதால்தான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத்தகவலை படத்தின்  இயக்குநர் கிருஷ்ணா மறுத்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இயக்குநர் கிருஷ்ணா விளக்கம் 

அந்த விளக்கத்தில், “ சிலம்பரசன் நடிக்க இருக்கும் காட்சிகளோடுதான் படத்தை ஆரம்பித்தோம். ஆனால் அங்கு கடுமையான மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. அதனால் அங்கு ஷூட்டிங்கே செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அதனால் ஷூட்டிங்கிற்கு 10 நாட்கள் பிரேக் விட்டு இருக்கிறோம். ஆனால் அங்கு இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறது. இதனால் இந்த இடைப்பட்ட நேரத்தில் மதுரை மற்றும் கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அடுத்ததாக 25 ஆம் தேதி மதுரையில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், நிலவி வந்த சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இயக்குனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’  பட டிரெய்லர் !
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’  பட டிரெய்லர் !
தனித்து விட்டாலும் கலங்கிடமாட்டார் எடப்பாடி...இயக்குநர் சேரன் ஆதரவு
தனித்து விட்டாலும் கலங்கிடமாட்டார் எடப்பாடி...இயக்குநர் சேரன் ஆதரவு
யோசிச்சி பேசணும்.. சனாதானம் பற்றி பேசிய உதயநிதி.. அட்வைஸ் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
யோசிச்சி பேசணும்.. சனாதானம் பற்றி பேசிய உதயநிதி.. அட்வைஸ் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
ரவி மோகன் காலில் விழுந்த கெனிஷா...இவங்க தனி டிராக்ல போறாங்களே!
ரவி மோகன் காலில் விழுந்த கெனிஷா...இவங்க தனி டிராக்ல போறாங்களே!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Split: திமுக - அதிமுக கூட்டணிக்கு ஓகே சொன்ன டெல்லி.. இபிஎஸ் செய்த செயல்.. சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
AIADMK Split: திமுக - அதிமுக கூட்டணிக்கு ஓகே சொன்ன டெல்லி.. இபிஎஸ் செய்த செயல்.. சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
Radhan Pandit: ’’தப்புன்னா திருத்திப்போம்’’ ஜோதிடருக்கு அரசுப் பதவி- ஒரே நாளில் வாபஸ் பெற்ற தவெக அரசு!
Radhan Pandit: ’’தப்புன்னா திருத்திப்போம்’’ ஜோதிடருக்கு அரசுப் பதவி- ஒரே நாளில் வாபஸ் பெற்ற தவெக அரசு!
CBSE 12th Result 2026: ஒருவழியாக… சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; குறைந்த தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE 12th Result 2026: ஒருவழியாக… சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; குறைந்த தேர்ச்சி- காண்பது எப்படி?
Edappadi Palaniswami: நீங்க செய்வது நியாயமா? - முதல்வர் விஜயிடம் முறையிட்ட எடப்பாடி பழனிசாமி.. அதிர்ந்த சட்டசபை!
Edappadi Palaniswami: நீங்க செய்வது நியாயமா? - முதல்வர் விஜயிடம் முறையிட்ட எடப்பாடி பழனிசாமி.. அதிர்ந்த சட்டசபை!
Sowmiya Anbumani: தமிழ்நாட்டில் தலைகுனிந்து செல்லும் பெண்கள்; எங்கே? ஏன்? சௌமியா அன்புமணி வேதனை!
Sowmiya Anbumani: தமிழ்நாட்டில் தலைகுனிந்து செல்லும் பெண்கள்; எங்கே? ஏன்? சௌமியா அன்புமணி வேதனை!
CM Vijay: ”ஆமா, நாங்க மைனாரிட்டி அரசு தான்” யாரையும் மிரட்டும் ஆட்சி இல்லை - CM விஜய் அதிரடியான பேச்சு
CM Vijay: ”ஆமா, நாங்க மைனாரிட்டி அரசு தான்” யாரையும் மிரட்டும் ஆட்சி இல்லை - CM விஜய் அதிரடியான பேச்சு
Tamil Nadu Floor Test: முதல்வர் விஜய் தான்.. ஆதரவு கொடுத்த 144 எம்.எல்.ஏ.க்கள்.. எதிர்ப்பு இத்தனை பேரா?
Tamil Nadu Floor Test: முதல்வர் விஜய் தான்.. ஆதரவு கொடுத்த 144 எம்.எல்.ஏ.க்கள்.. எதிர்ப்பு இத்தனை பேரா?
Southwest Monsoon: அக்னி நட்சத்திரம் முடியும் முன் மழை - மே 16-ல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை; லேட்டஸ்ட் தகவல்
அக்னி நட்சத்திரம் முடியும் முன் மழை - மே 16-ல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை; லேட்டஸ்ட் தகவல்
Embed widget