Tamil Nadu Floor Test: முதல்வர் விஜய் தான்.. ஆதரவு கொடுத்த 144 எம்.எல்.ஏ.க்கள்.. எதிர்ப்பு இத்தனை பேரா?
Tamil Nadu Floor Test: சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் விஜய் பிற கட்சிகளின் ஆதரவை நாடினார். இன்று சட்டப்பேரவையில் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார்.

தமிழக வெற்றிக் கழகம் அரசு மீதான நம்பிக்கை மீதான வாக்கெடுப்பு விஜய்க்கு சாதகமாக அமைந்துள்ளது. தவெக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 5 கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர். ஆனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் விஜய் பிற கட்சிகளின் ஆதரவை நாடினார். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஆகியவை ஆதரவளிக்க விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற விஜய் 3 நாட்களில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே அதிமுகவில் இரண்டு அணி செயல்பட்டு வரும் நிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏ.,க்கள் தரப்பு விஜய்க்கு தமிழக சட்டப்பேரவையில் ஆதரவு தெரிவித்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். பாமக 4 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ., ஒருவர் என 5 பேர் நடுநிலை வகித்தனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தது.
தவெக அரசுக்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.,க்களும், எதிராக 22 எம்.எல்.ஏ.,க்களும் வாக்களித்தனர். இதன்மூலம் தவெக ஆட்சி பெரும்பான்மையை நிரூபித்து விஜய் முதலமைச்சராக தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















