மேலும் அறிய

யோசிச்சி பேசணும்.. சனாதானம் பற்றி பேசிய உதயநிதி.. அட்வைஸ் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு என்னை உண்மையாகவே கவர்ந்தது. அதை உடனே பாராட்டிப் பதிவிட வேண்டும் என்ற எண்ணமும் வந்தது என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சனாதானம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றி நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவு ஒன்றை வெளியிட்டார். 

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியமைத்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. மு.க.ஸ்டாலின் ஜெயிக்காத நிலையில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் நேற்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில், “மக்​களைப் பிரிக்​கும் சனாதனம்​ நிச்​ச​யம்​ ஒழிக்​கப்​பட வேண்​டும்” என தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது. அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிலையில் உதயநிதி பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “சட்டமன்றத்தில் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு என்னை உண்மையாகவே கவர்ந்தது. அதை உடனே பாராட்டிப் பதிவிட வேண்டும் என்ற எண்ணமும் வந்தது. ஆனால் சனாதானம் குறித்து வந்த விவாதம் என்னை சற்றே நிறுத்தி யோசிக்க வைத்தது . ஏனெனில் மதம், அடையாளம், சமூக அமைப்பு போன்ற விஷயங்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை. மிக விரைவில் பிளவுபடுத்தும் விவாதங்களாக மாறிவிடும்.
தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது, இந்துத்துவம் என்ற நம்பிக்கையையோ மதத்தையோ புறக்கணிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்று நான் நினைக்கவில்லை.

நான் புரிந்துகொண்ட வரையில் விமர்சனம் சமூக அடுக்கு முறை, மனிதர்களை வகைப்படுத்தும் அமைப்புகள் போன்றவற்றை நோக்கியது என்றாலும்  காலப்போக்கில் அவை நடைமுறையில் சமத்துவமின்மை, ஒதுக்கல், மற்றும் ஒடுக்குமுறைக்கு காரணமாகி விட்டன. அதில் பல விஷயங்கள் தவறான விளக்கங்களாலும் தலைமுறை தலைமுறையாக ஏற்பட்ட தவறான பயன்பாட்டாலும் உருவானதாக இருந்தாலும், மனிதர்களுக்கிடையே மரியாதையின்மையையோ சமத்துவமின்மையையோ நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் மரபுகள், சொற்கள், மற்றும் அமைப்புகளை நாம் அனைவரும் இணைந்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்று தோன்றுகிறது.

எந்த தத்துவமோ அமைப்போ இருந்தாலும், அது மனிதநேயம், கண்ணியம், கருணை, மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை மையமாக கொண்டு வளர வேண்டும்.என் புரிதலின்படி, இந்து மதத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று  கேள்வி கேட்கும் இடம், மறுபரிசீலனை செய்யும் திறன், விவாதிக்கும் சுதந்திரம், மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு இடமளிப்பதுதான்.

அதேபோல், தமிழ் தாய் வாழ்த்து குறித்து நடைபெறும் விவாதத்தையும் நான் கவனித்து வருகிறேன். அது எந்த வரிசையில் இசைக்கப்படுகிறது என்பதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை உண்மையாகவே புரிந்துகொள்ள முயற்சித்து வருகிறேன். இதற்குப் பின்னால் வரலாற்று, அரசியல், மற்றும் உணர்ச்சி சார்ந்த காரணங்கள் இருக்கலாம். அவை பலருக்கும் முழுமையாகத் தெரியாமல் இருக்கலாம்.
அதனால், அதன் முழுப் பின்னணி, உணர்வுகள், மற்றும் வரலாற்றை புரிந்துகொள்ளாமல் உடனடியாக ஒரு கடுமையான நிலைப்பாடு எடுக்கவோ கருத்து சொல்லவோ நான் விரும்பவில்லை” என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget