மேலும் அறிய

AIADMK Split: திமுக - அதிமுக கூட்டணிக்கு ஓகே சொன்ன டெல்லி.. இபிஎஸ் செய்த செயல்.. சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!

CV Shanmugam vs Edappadi Palanisamy: 25 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் முதலமைச்சர் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 22 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். இதனால் அதிமுகவில் பிளவு உச்சத்தை அடைந்துள்ளது.

பொதுச்செயலாளர் சட்டமன்ற கொறடாவை நேரடியாக நியமனம் செய்ய முடியாது, எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வதாக அதிமுக எம்.எல்.ஏ., சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து 3ம் இடத்திற்கு சென்றுவிட்டது. அக்கட்சி சார்பில் 47 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தனர். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “25 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். 22 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில கருத்துகளை தெரிவித்துள்ளார். நான் அதிமுக பொதுச்செயலாளர். என்னால் நியமனம் செய்யப்பட்ட உத்தரவை மீறி வாக்களித்துள்ளார்கள் என சொல்கிறார். இது முற்றிலும் தவறானது. சட்ட ரீதியாக தவறான கருத்தைப் பொதுவெளியில் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் சட்டமன்ற கொறடாவை நேரடியாக நியமனம் செய்ய முடியாது. சட்டமன்ற குழு கூட்டம் நடைபெற்று அதில் தலைவர், துணைத்தலைவர், கொறடா தேர்வு செய்யப்பட வேண்டும். இதுதான் மரபாக இருந்து வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, நான் நியமனம் செய்தேன் என சொல்கிறார். அவர் கொறடாவை நியமனம் செய்ய முடியாது. 

இவர் தான் ஒரு கட்சியின் கொள்கை முடிவுகளை கொறடாவுக்கு சொல்ல, அவர் சட்டமன்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தரவுகளை கொடுப்பார். இதுதான் சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் நடைமுறையாகும். இபிஎஸ்க்கு தெரியாதது எதுவும் இல்லை. தன்னுடைய பலவீனத்தை மறைக்க இப்படி தவறான ஒரு தகவலை எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நான் சட்டமன்ற தலைவராக எம்.எல்.ஏ,க்களால் தேர்வு செய்யப்பட்டதாக கூறுகிறார். அது அப்பட்டமான பொய். இபிஎஸ் எம்.எல்.ஏ.,க்கள் 47 பேரின் கையெழுத்தைப் பெற்றதாக சொல்கிறார். அப்படிப்பட்ட கூட்டம் எங்கு, எப்போது நடைபெற்றது என்பதை சொல்ல முடியுமா?

அப்படி ஒரு கூட்டம் நடக்கவில்லை. நாங்கள் அவரை சந்தித்த ஒரு கூட்டத்தின் புகைப்படத்தை காட்டுகிறார். கூட்டம் நடந்ததற்கான நோட்டை காட்ட முடியுமா? பாண்டிச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார் தெரியுமா?. நான் மேலே பேசிவிட்டேன். அங்கு சம்மதம் சொல்லி விட்டார்கள். நாம் ஆட்சியமைக்கிறோம். நான் முதலமைச்சராகிறேன். திமுக வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும்” என கூறியதாக சி.வி.சண்முகம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது அதிமுக பொதுச்செயலாளர் என்ற வார்த்தையை சி.வி.சண்முகம் தவிர்த்துள்ளார். இதனால் அதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
பாஜக முகத்தை மாற்றினாலும் எடுபடாது! - அண்ணாமலையின் புதிய கட்சி குறித்து கே.பாலகிருஷ்ணன் சாடல்!
பாஜக முகத்தை மாற்றினாலும் எடுபடாது! - அண்ணாமலையின் புதிய கட்சி குறித்து கே.பாலகிருஷ்ணன் சாடல்!
EB அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு; ஊழல் ஆதாரத்தை அழிக்க சதி? அன்புமணி சந்தேகம்
EB அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு; ஊழல் ஆதாரத்தை அழிக்க சதி? அன்புமணி சந்தேகம்
வெளி மாநிலங்களை கலக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்... கர்நாடக முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர சோழன் !
வெளி மாநிலங்களை கலக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்... கர்நாடக முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர சோழன் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
Embed widget