Sigappu Rojakkal: 1978 ல் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன 11 படங்கள்... தனி ஆளாக மலர்ந்த ‛சிகப்பு ரோஜாக்கள்‛
Sigappu Rojakkal: அதுமட்டுமின்றி ப்லிம் ஃபேர் விருதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதையும் சிகப்பு ரோஜாக்கள் பெற்றது
முதல் படம் 16 வயதினிலே சொம்ம ஹிட்... இரண்டாவது கிழக்கே போகும் ரயில்... அதுவும் மாஸ் ஹிட். இப்போது இயக்குனர் பாரதிராஜா மீது ‛கிராமத்து’ இயக்குனர் என்கிற முத்திரை விழுந்துவிட்டது. அவரால் இது மாதிரியான படங்கள் தான் தர முடியும் என்று ஒரு புறம் பாராட்டும் , இன்னொருபுறம் விமர்சனமும் எழுந்தது.
அதற்கு பதிலடி தர முடிவு செய்தார் பாரதிராஜா. கமல்-ஸ்ரீதேவியை வைத்து நகரில் நடக்கும் ஒரும் க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கினார் பாரதிராஜா. கன்னியர்களின் கனவு மன்னாக கமல் இருந்த சமயம் அது. அவருக்கான கதையாக அது இருக்க வேண்டும், அதே சமயத்தில் தன்னுடைய படம் என்பதிலும் கவனமாக இருந்தார் பாரதிராஜா.
சிறு வயதில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஒருவன், விபரம் வந்ததும் பெண்களை பழிவாங்கும் கதை தான் சிகப்பு ரோஜாக்கள். வழக்கமாக சிவப்பு என்கிற பதத்தை தான் நாம் எழுத்தில் பயன்படுத்துவோம். ஆனால், தான் நகர்புற படம் எடுத்தாலும், அதில் கிராமப்புற நெடி இருக்க வேண்டும் என்பதற்காக சிவப்பு என்பதற்கு பதிலாக, சொல்லாடலான ‛சிகப்பு’ என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருப்பார் பாரதிராஜா.
View this post on Instagram
‛இந்த பொம்பளைங்களே இப்படி தான்... குத்துங்க எஜமான் குத்துங்க...’ என்கிற டயலாக் இன்று பரவலாக மீம்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதை ஒரிஜினலாக பயன்படுத்தியது இந்த படத்தில் தான்.
கமல் பற்றியோ ஸ்ரீதேவி பற்றியோ சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர்கள் இல்லாமல் அந்த படமும் இல்லை. இன்று பல சைக்கோ படங்கள் வருகிறது என்றால், அதற்கு அச்சாரம் போட்டது சிகப்பு ரோஜாக்கள் எனலாம். 1978 அக்டோபர் 28 இதே நாளில் வெளியான சிகப்பு ரோஜாக்கள், இன்றோடு 44 ஆண்டுகளை கடக்கிறது.
’நினைவோ... ஒரு பறவை...’
‛இந்த மின்மினிக்கு கண்ணில்...’
படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் தான். அவை இரண்டுமே , என்றும் கேட்கும் ராகம். இசையை விட பின்னணிக்கு முக்கியத்துவம் கொண்ட இத்திரைப்படத்திற்கு இளையராஜா, தலைமை ராஜாவாக பயணித்திருப்பார். இதுவும் 1978 தீபாவளி பண்டிகை வெளியீடாக ரிலீஸ் ஆன படம் தான். அதே நாளில் மொத்தம் 11 தமிழ் திரைப்படங்கள் வெளியாகின. அதில் கமல் நடித்த அவள் அப்படித்தான், மனிதரின் இத்தனை நிறங்களா, தப்புத்தாளங்கள் ஆகிய படங்களும் அடக்கம். ஆனால், அத்தனை படங்களையும் விட , ஏன் வெளியான 11 படங்களை விட 175 நாட்கள் ஓடி சிகப்பு ரோஜாக்கள் மெகா ஹிட் படமானது.
அதுமட்டுமின்றி ப்லிம் ஃபேர் விருதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதையும் சிகப்பு ரோஜாக்கள் பெற்றது. ஈரா குலாபிலு என்கிற பெயரில் தெலுங்கிலும், ரெட் ரோஸ் என்கிற பெயரில் இந்தியிலும் இத்திரைப்படும் வெளியாகி, அங்கும் வரவேற்பை பெற்றது.