One Year of Shershaah: சித்தார்த்துடன் இதை கொண்டாடிய அர்ஜுன் ரெட்டி நடிகை.. இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ
ஷெர்ஷா திரைப்படம் வெளியாகி ஓராண்டு ஆன நிலையில் அதனைக் கொண்டாடும் விதமாக நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி டூயட் பாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளது.
ஷெர்ஷா திரைப்படம் வெளியாகி ஓராண்டு ஆன நிலையில் அதனைக் கொண்டாடும் விதமாக நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி டூயட் பாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளது.
கார்கில் நாயகன் விக்ரம் பத்ராவின் பயோபிக்காக உருவான ஷெர்ஷா திரைப்படம், வெளியாகி ஓராண்டாகியுள்ளது. இந்தப் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். தமிழில் பட்டியல், பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விஷ்னுவர்தன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தியில் இது அவருக்கு அறிமுகப்படம். திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், ஷெர்ஷா திரைப்படம் வெளியாகி ஓராண்டு ஆன நிலையில் அதனைக் கொண்டாடும் விதமாக நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி டூயட் பாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளது.
இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்படும் நிலையில், இருவருமே ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். அதில் கியாரா ஷெர்ஷா படத்தில் வரும் வசனம் ஒன்றை எழுதியுள்ளார். நீ என்னை பெரிய வாக்குகள் அளிக்கச் சொன்னாய். ஆனால் நீ விளையாட்டுப் பையனாக இருக்கிறாய் என்ற வசனம் அது. அதற்கு பதிலளிக்கும் விதமாக சித்தார்த் மல்ஹோத்ரா, நான் எதையுமே மறக்கவில்லை. நீ தயாராக இரு. நான் 6 மணிக்கு வருவேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் சித்தார்த், கியாரா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவைக் காண:
View this post on Instagram
கரண் ஜோஹரின் 'ஸ்டுடென்ட் ஆப் தி இயர் ' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா அறிமுகமானார். சித்தார்த் மல்ஹோத்ரா ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பாரிஸ், மிலன், நியூயார்க் போன்ற நாடுகளில் ராபர்டோ காவல்லி உள்ளிட்ட முக்கிய வடிவமைப்பாளர்களுக்காக ராம்ப் வாக் செய்துள்ளார். ஃபேஷன் படத்தில் சித்தார்த் முதலில் அறிமுகம் ஆக இருந்தார் பின்பு சில காரணங்களால் இவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. டைம்ஸ் ஆப் இந்தியாவின் 2012 ஆம் ஆண்டின் ‘50 மிகவும் விரும்பத்தக்க ஆண்கள்’ பட்டியலில், இடம் பெற்றார். அவர் தனது ஓய்வு நேரத்தில் கார்ட்டூன்களை வரைவதை வழக்கமாக வைத்துள்ளார். மல்ஹோத்ரா கூடைப்பந்து, டென்னிஸ் மற்றும் ரக்பி ஆகியவற்றில் நன்கு பயிற்சி பெற்றவர். "ஸ்டுடென்ட் ஆப் தி இயர்" படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
யார் இந்த கேப்டன் விக்ரம் பத்ரா?
1999 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போர் தாக்குதலில் போராடி, தன்னுடைய 24 வயதிலேயே வீர மரணமடைந்தவர் கேப்டன் விக்ரம் பத்ரா. போரின்போது, களத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் கேப்டன் பத்ராவை ‘ஷெர்ஷா’ என அழைத்துள்ளனர். அதுவே, படத்தின் டைட்டிலாக வைக்கப்பட்டது.
இமாச்சல் பிரதேச மாநிலம் பலம்பூரைச் சேர்ந்தவர் கேப்டன் விக்ரம் பத்ரா. காஷ்மீரில் கார்கில் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் கேப்டன் விக்ரம் பத்ராவுக்கு இடையான உரையாடல்கள் சுவாரஸ்யமானது. போர்க் களத்தில், ரேடியோ சிக்னல் வழியே உரையாடிய பாகிஸ்தான் வீரர்கள், “ஏய், ஷெர்ஷா.. இங்கே வந்தால், மிகவும் கடினமான சவாலான நேரத்தை நீ சந்திக்க நேரிடும். நீங்கள் தோற்றுப்போகப் போகிறீர்கள். உங்களை வீசி எறியப் போகிறோம். அப்போது, உங்கள் நாட்டின் பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரை தூக்கிச் செல்லப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
அதற்கு ”முடியாது” என பதிலளித்துக் கொண்டே தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் கேப்டன் விக்ரம் பத்ரா. தாக்குதலில் தீவிரமாக சண்டையிட்டு கொண்டிருந்தபோது, குண்டுகளை வீசி எறிந்தபடி, “அன்போடு, மாதுரி தீக்ஷித்திடம் இருந்து” எனக் கூச்சலிட்டுள்ளார். உடன் இருந்த இந்திய வீரரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் வழியில், கேப்டன் விக்ரம் பத்ரா கொல்லப்பட்டார்.
இது மறக்க முடியாத சம்பவமாக கார்கில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. அவரது வீர மரணத்திற்கு பிறகு, உயரிய ராணுவ விருதான ‘பரம் விர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது.