மேலும் அறிய

திருமணத்துக்கு முன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வெளிநாட்டிற்கு பறந்த சித்தார்த் - கியாரா ஜோடி!

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்ற கியாராவிடம் சுற்றி சுற்றி சித்தார்த் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், வெட்கத்துடன் கியாரா பதிலளித்தது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

பாலிவுட்டில் லைம்லைட்டில் இருந்த பெரும்பாலான காதலர்கள் திருமணம் செய்துவிட,  இந்த ஆண்டு காதல் பறவைகளாக வலம் வந்து பாலிவுட் மீடியாக்களின் கவனமீர்த்தது சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி ஜோடி.

கடந்த ஆண்டு இந்தியில்  விஷ்ணு வர்தன் இயக்கிய ’ஷேர்ஷா’ படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்த இந்த ஜோடி ரசிகர்களைக் கவர்ந்து ஹிட் அடிக்க, இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவத் தொடங்கின.

தொடர்ந்து இந்தக் கிசுகிசுக்களை உறுதிப்படுத்தும் வகையில் சித்தார்த் - கியாரா ஜோடி பொது இடங்களில் ஒன்றாக வலம் வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

காதலை மறைமுகமாக சொன்ன ஜோடி

இந்நிலையில் இருவரும் காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தொடங்கி சக நடிகர்கள் வரை வெளிப்படையாக இவர்களை பல நிகழ்ச்சிகளிலும் கலாய்க்கத் தொடங்கினர்.

முன்னதாக காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்ற கியாராவிடம் சுற்றி சுற்றி சித்தார்த் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், வெட்கத்துடன் கியாரா பதிலளித்தது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

மேலும் இருவரும் டேட்டிங் செய்கிறீர்களா என கரண் எழுப்பிய கேள்விகளுக்கு இருவருமே மறுக்கவோ, ஆமோதிக்கவோ இல்லை.  ‘தாங்கள் நெருங்கிய நண்பர்களை விட நெருக்கமானவர்கள்’ என மறைமுகமாக கியாரா பதிலளித்தார். ”கியாராவை சிங்கிளாக இருந்தபோது சந்தித்தது எனக்கு வரப்பிரசாதம்” எனக் கூறி சித்தார்த் மல்ஹோத்ரா பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

2023இல் திருமணம்

இந்நிலையில் இவர்கள் இருவரும் வரும் 2023ஆம்  ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்ய உள்ளதாகவும், சண்டிகரில் உள்ள பிரம்மாண்ட திருமண மஹாலை தங்கள் திருமணத்துக்காக இந்த ஜோடி உறுதி செய்துள்ளதாகவும் முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.

மேலும் பாலிவுட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ராவின் வீட்டுக்கு ஒன்றாக இந்த ஜோடி வருகை தந்தது திருமண தகவல்களை மேலும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்தது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sidharth Malhotra (@sidmalhotra)

இந்நிலையில், தற்போது சித்தார்த் - கியாரா ஜோடி புத்தாண்டைக் கொண்டாட வெளிநாட்டுக்கு பறந்துள்ளனர். 

ஒன்றாக புத்தாண்டு கொண்டாட்டம்

விரைவில் திருமணம் செய்யவுள்ள இந்த ஜோடி புத்தாண்டை ஒன்றாக இணைந்து வரவேற்க வெவ்வேறு விமானங்கள் மூலம் பறந்து தங்கள் நியூ இயர் ஸ்பாட்டை அடைய உள்ளதாக பாலிவுட் பாப்பரசிக்கள் தகவல் கசியவிட்டுள்ளனர்.

சித்தார்த் - ராஷ்மிகா நடித்துள்ள மிஷன் மஞ்சு படம் வரும் ஜனவரி 20ஆம் தேதி  வெளியாக உள்ளது. கியாரா அத்வானி, நடிகர் கார்த்திக் ஆர்யன் மீண்டும் இணையும்  ‘சத்ய ப்ரேம் கி கதா’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.

   

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget