Siddharth 40 : சித்தார்த்தின் 40-வது படத்தின் பூஜை...படத்தில் நடிக்கும் பிரபலங்கள் யார் தெரியுமா?
ஸ்ரீ கணேஷ் இயக்கும் நடிகர் சித்தார்த்தின் 40 -வது படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
சித்தார்த்
சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சித்தார்த் தற்போது நல்ல கதையமசம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சித்தா படத்தின் மூலம் பலமான கம் பேக் கொடுத்ததைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்துள்ள இந்தியன் 2 படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக சித்தார்த்தின் 40 ஆவது படத்திற்கான வேலைகள் தொடங்கி இருக்கின்றன. எட்டுத் தோட்டாக்கள் , குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார்.
சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை தயாரித்த ஷாந்தி டாக்கீஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
சித்தார்த் 40 படக்குழுவினர்
இன்று எங்கள் இரண்டாவது திரைப்படத்தின் துவக்கவிழா இனிதே நடைப்பெற்றது!
— Shanthi Talkies (@ShanthiTalkies) July 15, 2024
வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்❤️ #Siddharth40 #Siddharth @realsarathkumar @sri_sriganesh89 @Chaithra_Achar_ @RaghunathMeetha #Devayani @iamarunviswa pic.twitter.com/Z3gWnKOxer
இப்படத்தில் நடிகர் சரத்குமார் , நடிகை தேவயானி , மீதா ரகுநாத் , மற்றும் கன்னட நடிகை சைத்ரா அசார் உள்ளிட்டவர்கள் நடிக்க இருக்கிறார்கள் பட பூஜையில் இயக்குநர் ராம் , நிதிலன் ஸ்வாமிநாதன் , வெங்கட் பிரபு , மடோன் அஸ்வின் , ரவிகுமார் , எழுத்தாளர் நரண் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
மிஸ் யூ
இது தவிர்த்து சித்தார்த் நடித்துள்ள மற்றொரு படம் மிஸ்.யூ. இப்படத்தில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிரபலமான நடிகை ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘மாப்ள சிங்கம்’ மற்றும் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படங்களின் இயக்குநர் N.ராஜசேகர் இயக்கியுள்ள இப்படம் காதல், ஆக்சன், காமடி என முழுநீள பொழுதுப்போக்கு படமாகத் தயாராகியுள்ளது. பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் தமிழ்நாட்டில் முன்னோடியாகத் திகழும் '7 miles per second' நிறுவனத்தின் சார்பில் சாமுவேல் மேத்யூ இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
ஜே.பி, பொன்வண்ணன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கும் நிலையில், ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இல்லாமல், நகைச்சுவை மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படம் கலகலப்பாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.