தீபிகாவுக்கு ஜோடியா நடிப்பேன்னு சொல்லியிருந்தா.. சித்தாந்த் சதுர்வேதி சொன்ன ஷாக் ஸ்டேட்மெண்ட்
என்றைக்காவது ஒருநாள் தீபிகாவுக்கு ஜோடியாக நடிப்பேன் என்று யாராவது என்னிடம் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன்- சித்தாந்த் சதுர்வேதி
சித்தாந்த் சதுர்வேதி (Siddhant Chaturvedi ) பாலிவுட் சினிமாவின் மிக பிரபலமான நடிகர். நம்பிக்கைக்குரிய திறமைசாலியான இளம் நடிகர். ரன்வீர் சிங், ஆலியா பட் மற்றும் கல்கி கோச்லின் நடித்த ஜோயா அக்தரின் ( Zoya Akhtar’s) கல்லி பாய் (Gully Boy) திரைப்படத்தில் ராப்பர் எம்.சி.ஷேராக நடித்ததன் மூலம் பெரும் புகழ் பெற்றார். கொரோனா தொற்றுக்கு பின், சைஃப் அலி கான், ராணி முகர்ஜி மற்றும் ஷர்வரி வாக் ஆகியோருடன் பண்டி அவுர் பாப்லி 2, அதைத் தொடர்ந்து தீபிகா படுகோன், அனன்யா பாண்டே மற்றும் தைரிய கர்வாவுடன் கெஹ்ரையன். இப்போது, ஒரு முன்னணி பேஷன் மற்றும் பியூட்டி பத்திரிகையில் சமீபத்திய உரையாடலில், சித்தாந்த் தீபிகாவுடன் நடித்தது பற்றி பேசியுள்ளார்.
தீபிகாவுடன் நடித்தது பற்றியபோது அவர் கூறுகையில், “என்றைக்காவது ஒருநாள் தீபிகாவுக்கு ஜோடியாக நடிப்பேன் என்று யாராவது என்னிடம் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். நான் உண்மையில் சாதாரண இடத்தில் இருந்து வந்திருக்கிறேன். ஒரு திரையரங்கில் இருட்டில் ஒரு கூழாங்கல் எறியும் சிறுபனாக நான் இருப்பேன். பத்து வருடங்களுக்கு முன் அப்படிதான் இருந்தேன். ”என்று கூறினார்.
சில வருடங்களில், சித்தாந்த் , ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவருடனும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில், பிங்க்வில்லாவுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், கணவனும் மனைவியும் வேறுபட்டவர்கள், ஆனால் ஒரே மாதிரியானவர்கள் என்று சித்தாந்த் கருத்து தெரிவித்தார். "நான் ரன்வீரை முதன்முதலில் சந்தித்தபோது, நான் அவருடன் புத்தகம் படித்தேன். அது ரன்வீர் சிங் அல்ல, அவர் முராத்தின் தோலுக்குள் நுழைய முயற்சிக்கும் ஒரு பையன் என்பதை என்னால் உணர முடிந்தது. தீபிகாவை நான் முதன்முதலில் சந்தித்தபோது, அவர் தீபிகா இல்லை. இந்த பெண் தன் முதல் நாள் பள்ளியில் பென்சில் பாக்ஸ், பேனா, ஹைலைட்டர்களுடன் அமர்ந்து எங்களுடன் முதல் பெஞ்சர் வைப்களைக் கொடுத்தார்.” என்றார். அடுத்தாக சித்தாந்த் சதுர்வேதி நடிக்கும் ஃபோன் பூத் (Phone Bhoot )என்ற திரைப்படம் ஜூலையில் வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க..
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை
பாக்கியலட்சுமியிடம் சிக்கிக்கொண்டாரா கோபி..! உண்மையை கண்டுபிடித்துவிட்டாரா செல்வி அக்கா..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்