The Goat : தி கோட் படத்தின் மூன்றாவது பாடலை பாடியுள்ள ஸ்ருதி ஹாசன்...எப்போ ரிலீஸ் தெரியுமா?
விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் மூன்றாவது பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளதாகவும் இப்பாடல் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. பிரபுதேவா , பிரசாந்த் , லைலா , சினேகா , வைபவ் , மோகன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தி கோட் படத்தின் மூன்றாவது பாடல்
தி கோட் படத்தில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. முதலாவதாக கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியானது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாடலான சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியானது. இரு பாடல்களையும் நடிகர் விஜய் பாடியிருந்தது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமைந்தது. தற்போது தி கோட் படத்தின் மூன்றாவது பாடல் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய இரு பாடல்களைக் காட்டிலும் இந்தப் பாடல் ரசிகர்களூக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இப்பாடலில் நடிகை த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்கள் படக்குழு சார்பில் இருந்து உறுதிப் படுத்தப்படாத நிலையில் மற்றொரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
#TheGreatestOfAllTime 3rd Single Track expected next week.💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) July 24, 2024
Singer - Shruthi Haasan🎤🎶 pic.twitter.com/ReBBtpe97s
தி கோட் படத்தின் மூன்றாவது பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாடல் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கூலி
ஸ்ருதி ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யராஜ் , மலையாள நடிகர் செளபின் சாஹிர் உள்ளிட்ட பிற நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். கூலி படத்தின் படக்குழு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் படிக்க : Thangalaan : ஐந்து டாக்டர்களிடம் சிகிச்சைக்கு சென்றேன்...தங்கலான் படத்தில் அத்தனை சவால்கள்..மாளவிகா புலம்பல்