மேலும் அறிய

Vairamuthu on Budget: “மழை மாண்பு தவறிவிட்டது; அறிந்தே செய்யும் அநீதி” - மத்திய அரசை கவிதையால் விமர்சித்த வைரமுத்து

Vairamuthu on Budget : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கவிதையால் சுட்டிக்காட்டி திருக்குறளோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரையில் 19 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் 2024 -25 ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அவரின் உரை மூலம் இந்தியாவின் பல்வேறு துறை மற்றும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து விவரித்தார். 

விவரிக்கப்பட்ட அந்த நிதி அறிக்கையில் கல்விக்கான புதிய திட்டங்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்க வரி குறைப்பு, வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு, வருமான வரி என பல்வேறு துறைகளின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. 

Vairamuthu on Budget:  “மழை மாண்பு தவறிவிட்டது; அறிந்தே செய்யும் அநீதி” - மத்திய அரசை கவிதையால் விமர்சித்த வைரமுத்து

இந்நிலையில் இந்திய எங்கும் பல்வேறு தலைவர்கள் அவரவர்களின் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டில்  தமிழகத்துக்கு எந்த ஒரு நலத்திட்டமும் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில் இல்லையே என கேள்வி எழுப்பி இருந்தார். 

தற்போது கவிஞர் வைரமுத்து நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்து தன்னுடைய விமர்சனத்தை திருக்குறளை முன்வைத்து தெரிவித்துள்ளார். 

ஒன்றிய அரசின்

நிதிநிலை அறிக்கையில்

உரிமையும் நியாயமும்

தேவையும் உள்ள தமிழ்நாடு

போகிற போக்கில்

புறக்கணிக்கப்பட்டிருக்கிறது

இது

அறிந்தே செய்யும் அநீதி

தனக்கு எதிராகக்குடை

பிடித்தவனுக்கும்

சேர்த்தே பொழிவதுதான்

மழையின் மாண்பு
மழைமாண்பு

தவறிவிட்டது
நிதிநிலை அறிக்கையில்

குறள் ஒன்று கூறுவது

எழுதாத மரபு.

இவ்வாண்டு விடுபட்டுள்ளது
எழுத வேண்டிய குறள்

என்ன தெரியுமா?

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?

கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்

ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்

Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!

TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?

CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!

பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?

Embed widget