Shruthi Hassan | ”பயணங்களையும், ஹெல்த்தையும் இனிமே அசால்ட்டா எடுத்துக்கமாட்டேன்” - ஸ்ருதிஹாசன்
கொரோனா தொற்றின் காரணமாக பலரும் தங்களின் வெளியூர் பயணங்களை மிஸ் செய்து வருகிறார்கள். இதில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஒருவர் . இனி என் பயணங்களை ஒரு போதும் எளிதாக எடுத்து கொள்ளமாட்டேன் என்று தனது இன்ஸ்டா பேஜில் பகிர்ந்திருக்கிறார்.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்துவரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கொரோனா தொற்றால் திரைப்பட பிரபலங்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலர் தடுப்பூசி போட்டு கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு அளித்தும் வருகிறார்கள். தங்களின் கொரோனா பாதிப்புகள் , எவ்வாறு அதில் இருந்து மீண்டார்கள் , தடுப்பூசி போட்டுக்கொண்டது மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்பதுபோன்ற அனைத்து செயல்களையும் தங்களின் சமூக வலைத்தளத்தில் நடிகர் நடிகைகள் பகிர்ந்து வருகிறார்கள் .
இந்த கொரோனா இரண்டாவது அலை பலரின் பயணம் தொடர்பான பணியில் இருந்து தள்ளி வைத்திருக்கிறது . பயணம் செய்வதை அதிகம் மிஸ் செய்பவர்களில் ஒருவர் நடிகை ஸ்ருதிஹாசன். சமூக வலைதளத்தில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் ஸ்ருதி, தினமும் அவர்செய்யும் எதாவது ஒரு விஷயத்தை அனைவரிடத்திலும் பகிர்ந்து கொள்வார் .
View this post on Instagram
இந்நிலையில் , நேற்று பயணம் செய்வதை தான் எவளோ மிஸ் செய்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது "பயணம், நல்ல உணவு மற்றும் உடல் ஆரோக்கியம் என எதையும் இனி எளிதாக எடுத்து கொள்ளமாட்டேன். இந்த கொரோனா காலம் என் பயணம், என் உடல் ஆரோக்கிய எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தி இருக்கிறது. அனைவரும் இந்த காலத்தில் இந்த கொரோனா பயணத்தில் மனதளவில் ஒன்றாக இணைந்துள்ளோம், நம்மை சுற்றி என நடக்கிறது என்ற தெளிவு நம்மிடத்தில் வேண்டும் முதலில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் .
இது ஒரு சிறந்த தருணம், நம்மைப்பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு, நாம் எப்படி பட்ட மனிதர்கள் என்று இந்த நிலைமை நம்மை நமக்கே புரியவைக்கும். இந்த உலகம் மிகவும் அழகானது. நாம் அனைவரும் சேர்த்து இதை சீக்கரம் சரி செய்வோம் , அன்பை விதைப்போம்" என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார் .