Lion | ஷாருக்கான் படம் பேரு Lion? தீயாய் வேலை செய்யும் அட்லீ.. கசிந்த புதுத்தகவல்கள்!
அட்லீ - ஷாருக் இணைந்துள்ள புதிய படம் தொடர்பாக சில தகவல்கள் கசிந்துள்ளன
அட்லீ - ஷாருக் இணைந்துள்ள புதிய படத்துக்கு லயன் (Lion) எனப் பெயரிப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் விஜயை இயக்கியதும் பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்குகிறார் அட்லீ. இந்த செய்தி வந்ததிலிருந்தே அதன் மீதான பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதுவும் பிகில் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகியும் ஷாருக்கானுடனான திரைப்படம் குறித்து செய்திகள் எதுவும் வராததால் திரைப்படம் குறித்த பல யூகங்களை சமூக வலைத்தளங்களில் விவாதித்துக்கொண்டிருந்தன. தற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெளியானது அட்லீ- ஷாருக் படத்தகவல்கள்.
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தில் இருக்கிறார் என்ற செய்தி வந்ததும், தமிழ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அதை தொடர்ந்து திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பெயரும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர தொடங்கியது. சன்யா மல்ஹோத்ரா இணைவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. இந்நிலையில் படப்பிடிப்பு வேலைகளும் தீவிரமான தொடங்கியது. முதற்கட்டமாக புனேவில் ஷூட்டிங் தொடங்கியது. இதில் நயன் தாரா, ஷாருக் பங்கேற்றதாக தெரிகிறது. இந்நிலையில் படத்தின் மேலும் அப்டேட்டாக ஒரு செய்தி கசிந்துள்ளது. இப்படத்துக்கு லயன் (Lion) எனப் பெயரிப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அதுமட்டுமின்றி படத்தில் பிரியாமணி இணைவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
#Lion is the title of @iamsrk - @Atlee_dir 's next? This particular letter has caused the buzz! pic.twitter.com/ymnOz03I84
— Rajasekar (@sekartweets) September 15, 2021
ஆக்ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகிறது என்றும் இந்த படத்தில் பாலிவுட் கிங் காங் என அழைக்கப்படும் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஒரு கேரக்டரில் நடிக்க சான்யா மல்ஹோத்ரா நடிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. இவர் ஏற்கனவே ஆமீர்கானுடன் இணைந்து, தங்கல் படத்தில் நடித்திருந்தார். 180 நாட்களில் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்க இயக்குநர் அட்லி முடிவு செய்து இருப்பதாகவும், பிரமாண்ட பட்ஜெட்டில் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
படம் தொடர்பான ஷூட்டிங் இந்தியா, வெளிநாடு என பல இடங்களில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இந்தியாவில் சில நகரங்களை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஷூட்டிங் நடைபெறும் புனே மட்டுமின்றி, மும்பையிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை தவிர்த்து துபாயிலும் அங்குள்ள சில இடங்களிலும் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
#ShahRukhKhan
— Nazaket Rather (@RatherNazaket) September 15, 2021
Superstar #ShahRukhKhan & filmmaker #Atlee's next project is said to be titled #Lion. Film also stars #Nayanthara pic.twitter.com/2402bBsch3