மேலும் அறிய

Pathaan : பாகுபலி 2 ரெக்கார்டையும் முறியடிச்சாச்சு.... பதான் தொடர் சாதனை... உற்சாகத்தில் படக்குழுவினர்!

ராஜமௌலியின் ’பாகுபலி 2’ நானூறு கோடி ரூபாய் வசூலை15 நாள்களில் எட்டியிருந்த நிலையில், அந்த வசூலை 12 நாள்களில் எட்டியிருக்கிறது பதான் திரைப்படம்.

அதிவேகமாக 400 கோடி ரூபாயை வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பாகுபலி 2-வை பின்னுக்குத் தள்ளி பெற்றிருக்கிறது பதான் திரைப்படம்.

ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியாவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் படம் வெளியானது.

படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றதையடுத்து, திரையிடப்படும் காட்சிகளும், தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளதோடு வசூலில் பல சாதனைகளை படைத்துவருகிறது.

ராஜமௌலியின் ’பாகுபலி 2’ நானூறு கோடி ரூபாய் வசூலை15 நாள்களில் எட்டியிருந்த நிலையில், அந்த வசூலை 12 நாள்களில் எட்டியிருக்கிறது பதான் திரைப்படம். அதுவும் ஹிந்தி பதிப்பில் மட்டும் இந்த வசூலை பெற்றிருக்கிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவற்றை சேர்த்தால் சுமார் 415 கோடியை தாண்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே வேகத்தில் சென்றால் ’பாகுபலி 2’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பின் வசூலான 511 கோடியை இந்த வாரத்திலேயே பதான் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முறியடித்தால் பாலிவுட் சினிமா வரலாற்றில் அதிக வசூலை பெற்ற திரைப்படமாக பதான் இருக்கும். ஷாருக்கான் தீபிகா படுகோன் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான ’சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் தான் அவருக்கு கடைசி ப்ளாக்பஸ்டர் திரைப்படம் என்னும் நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பதான் திரைப்படம் வெற்றியடைந்துள்ளது.

இந்தியில் மட்டும் 400 கோடி ரூபாயை தாண்டியுள்ள நிலையில் உலக அளவில் சுமார் 780 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது பதான் திரைப்படம். பாலிவுட்டில் ஹிட் அடித்த டாப் படங்களில் தென்னிந்திய திரைப்டங்களான பாகுபலி, பாகுபலி2, கேஜிஎஃப்2 ஆகியவையும் இடம்பெற்றிருந்தன.

ஹிந்தி திரைப்பட இயக்குநர்களிடம் மக்களை ஈர்க்க வைக்கும் அளவிற்கு கண்டண்ட் இல்லை. பாலிவுட் தனது களத்தை தென்னிந்திய திரைத்துறையிடம் இழந்துவிட்டது என்ற விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையிலும், ’பாய்காட் பாலிவுட்’ எனும் பிரச்சாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் எழுந்த நிலையிலும் இந்த மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது பதான் திரைப்படம்.

மேலும் இப்படம் உலக அளவிலான வசூலில் விரைவில் 1000 கோடி வசூலை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் நேற்று அமீர் கானின் டங்கல் பட சாதனையையும் பதான் முறியடித்தது. இந்தியில் டங்கல் படம் 387 கோடி வசூலித்த நிலையில் அதனை பதான் முறியடித்து 400 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது. இந்நிலையில், பாகுபலி 2 படத்தின் ஒட்டுமொத்த இந்தி வசூலான 511 கோடியை பதான் முறியடிக்க இன்னும் ஒரு வார காலம் தேவைப்படும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Train Cancelled: சென்னையில் நாளை மின்சார ரயில் சேவை ரத்து; எந்தெந்த ரயில்கள் இயங்காது - விவரம் உள்ளே
சென்னையில் நாளை மின்சார ரயில் சேவை ரத்து; எந்தெந்த ரயில்கள் இயங்காது - விவரம் உள்ளே
PM Modi TN Visit: 30ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி? எதற்கு தெரியுமா?
PM Modi TN Visit: 30ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி? எதற்கு தெரியுமா?
Cyclone Remal: 10 பேர் மரணம்! மேற்கு வங்கத்தில் கரையை கடந்த ரெமல் புயல் - தற்போதைய நிலை என்ன?
Cyclone Remal: 10 பேர் மரணம்! மேற்கு வங்கத்தில் கரையை கடந்த ரெமல் புயல் - தற்போதைய நிலை என்ன?
PM Modi: ராகுல்காந்தி, கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆதரவு வருவது ஏன்? பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு!
PM Modi: ராகுல்காந்தி, கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆதரவு வருவது ஏன்? பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Hindu Muslim unity : பிள்ளையார் கோவில் கட்டுங்க! நிலம் கொடுத்த இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் வந்து அசத்தல்!IPL Final 2024 | WPL - IPL SAME TO SAME ஸ்க்ரிப்ட் இது நம்ம லிஸ்ட்லயே இல்ல!North Indian Issue | ’’அய்யோ..புள்ளை பிடிக்கறவன்?’’கட்டி வைத்த மக்கள்! சிக்கிய வடமாநிலத்தவர்Tirupati Accident News | திருப்பதி சென்ற குடும்பம் சுற்றுலாவில் நேர்ந்த சோகம் பதற வைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Cancelled: சென்னையில் நாளை மின்சார ரயில் சேவை ரத்து; எந்தெந்த ரயில்கள் இயங்காது - விவரம் உள்ளே
சென்னையில் நாளை மின்சார ரயில் சேவை ரத்து; எந்தெந்த ரயில்கள் இயங்காது - விவரம் உள்ளே
PM Modi TN Visit: 30ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி? எதற்கு தெரியுமா?
PM Modi TN Visit: 30ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி? எதற்கு தெரியுமா?
Cyclone Remal: 10 பேர் மரணம்! மேற்கு வங்கத்தில் கரையை கடந்த ரெமல் புயல் - தற்போதைய நிலை என்ன?
Cyclone Remal: 10 பேர் மரணம்! மேற்கு வங்கத்தில் கரையை கடந்த ரெமல் புயல் - தற்போதைய நிலை என்ன?
PM Modi: ராகுல்காந்தி, கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆதரவு வருவது ஏன்? பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு!
PM Modi: ராகுல்காந்தி, கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆதரவு வருவது ஏன்? பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு!
Southern Railway Recruitment: ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் உதவியாளர் பணி; விண்ணப்பிப்பது எப்படி? - முழு விபரம் உள்ளே
ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் உதவியாளர் பணி; விண்ணப்பிப்பது எப்படி? - முழு விபரம் உள்ளே
Watch video: புதிய சீரியலில் ரேஷ்மா! அவருக்கு ஜோடியாகும் ஹீரோ யார் தெரியுமா? வெளியான BTS வீடியோ
Watch video: புதிய சீரியலில் ரேஷ்மா! அவருக்கு ஜோடியாகும் ஹீரோ யார் தெரியுமா? வெளியான BTS வீடியோ
Kavya Maran: ரசிகர்களின் மனதை வென்ற காவ்யா மாறன்! ட்ரெஸ்ஸிங் ரூமில் என்ன பேசினார் தெரியுமா?
Kavya Maran: ரசிகர்களின் மனதை வென்ற காவ்யா மாறன்! ட்ரெஸ்ஸிங் ரூமில் என்ன பேசினார் தெரியுமா?
TNPSC Group 4 Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்  வெளியீடு; காண்பது எப்படி?
TNPSC Group 4 Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; காண்பது எப்படி?
Embed widget