மேலும் அறிய

SRK on Vijay: இதனால தான் நீங்க தளபதி...பதான் ட்ரெய்லர் வெளியிட்ட விஜய்க்கு தமிழில் நன்றி தெரிவித்த ஷாருக்!

விஜய் - ஷாருக்கான் இருவரும் ஏற்கெனவே பரஸ்பரம் நல்ல நட்புறவைக் கொண்டுள்ள நிலையில், விஜய் இன்று பதான் பட ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்.

பதான் படத்தின் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் விஜய்க்கு தமிழில் நன்றி தெரிவித்து ஷாருக்கான் ட்வீட் செய்துள்ளார்.

இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் ஆகியோரின் நடிப்பில், சுமார் 250 கோடி ரூபாய் அளவில் உருவாக்கப்பட்டுள்ள படம், பதான். பாலிவுட்டின் பாட்ஷாவாகக் கொண்டாடப்படும் ஷாருக்கான் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோவாக நடித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஷாருக்கின் பிறந்த நாள் அன்று இப்படத்தின் டீசர் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. வரும் ஜனவரி 25ஆம் தேதி தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என மும்மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். 

நடிகர் விஜய் - ஷாருக்கான் இருவரும் ஏற்கெனவே பரஸ்பரம் நல்ல நட்புறவைக் கொண்டுள்ள நிலையில், விஜய் இன்று பதான் பட ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பதான் ட்ரெய்லரை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் தமிழில் பகிர்ந்துள்ள பதிவு லைக்ஸ் அள்ளி வருகிறது. 

“மிக்க நன்றி நண்பா! இதனால தான் நீங்க தளபதி. கூடிய விரைவில் ஒரு அமைதியான விருந்தில் சந்திப்போம். நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கெனவே வாரிசு வெளியீட்டை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,  ஷாருக்கானின் இந்தப் பதிவு விஜய் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்ற வாரம் #AskSrk எனும் ஹேஷ்டேகில் தன் ரசிகர்களுடன் உரையாடல் மேற்கொண்ட நடிகர் ஷாருக் அப்போதும் விஜய் தனக்கு இனிமையான விருந்தளித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

 

அடுத்ததாக ஷாருக் - அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்திலும் விஜய் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
Embed widget