Shah Rukh Khan: விஜய் மிக அமைதியானவர், இனிமையானவர்.. ஆனாலும் ரஜினிதான் பாஸ்.. ட்விட்டரில் மனம் திறந்த ஷாருக்!
தனது இஸ்லாமிய குடும்பப் பெயர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஷாருக் காட்டமாக பதிலளித்துள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ட்விட்டரில் தன் ரசிகர்களுடனான உரையாடலில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் குறித்து ஷாருக்கான் பதிலளித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
பாலிவுட் தாண்டி உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் ஷாருக்கான், திரைப்படங்கள் தாண்டி தனது ரசிகர்களுடனான பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்கள், டாக் ஷோக்கள் என எப்போதும் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ட்விட்டரில் #AskSrk எனும் ஹேஷ்டேகில் தன் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடல் மேற்கொண்டு வருகிறார் நடிகர் ஷாருக். அந்த வகையில், இன்று தனது ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் குறித்து சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் பரம விசிறியான ஷாருக், ரஜினி சார் குறித்து நீங்கள் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஜெய்லர் புகைப்படத்தைப் பகிர்ந்து ’பாஸ் மேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
Bossman!!! https://t.co/ZWp6tS83ha
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023
அதேபோல் விஜய் பற்றிய கேள்விக்கு விஜய் மிக அமைதியானவர், இனிமையானவர், எனக்கு அருமையான இரவு உணவை அளித்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
He is too sweet and quiet. Fed me lovely dinner also…. https://t.co/Q1lcohsnYo
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023
விஜய் சேதுபதி எழுப்பப்பட்ட கேள்விக்கு ’ஆஸம் மற்றும் ஆஸம்’ எனப் பகிர்ந்துள்ளார்.
Awesome and awesome!! https://t.co/rpKSjz5PpY
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023
அதேபோல் கான்’ எனும் குடும்பப்பெயரை உபயோகிக்கும் ஷாருக்கானிடம் ”நீங்கள் காஷ்மீர் பின்புலத்தைக் கொண்டு ஏன் இந்தப் பெயரைப் பயன்படுத்துகிறீர்கள்” என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு காட்டமாக பதிலளித்துள்ள ஷாருக், ”உலகம் முழுவதுமே எனது குடும்பம். ஒருவர் குடும்பத்தால் பெயர் வாங்குவதில்லை. அது உழைப்பின் மூலம் சம்பாதித்தது. இதுபோன்ற அற்ப விஷயங்களில் ஈடுபடாதீர்கள்" என்று ஷாருக் பதிலளித்துள்ளார்.
The whole world is my family….family ke naam se naam nahi hota….kaam se naam hota hai. Choti baaton mein mat padho please. https://t.co/ctWPiUeUyO
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023
’மை நேம் இஸ் கான்’ படத்தில் சராசரி வாழ்வில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசியது தொடங்கி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் புனிதப் பயணங்கள் மேற்கொள்வது வரை ஷாருக்கான் ஒரு இஸ்லாமியராக தன்னை ஷாருக் தொடர்ந்து முன்னிறுத்து வருகிறார்.
ஷாருக், தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.