Shabana : ”இந்து பையன மட்டும் காதலிச்சிடாதன்னு, சொல்லி சொல்லி வளர்த்தாங்க “ - ஷபானா ஓப்பன் அப்..
இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததும் , இருவீட்டாரும் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் வீட்டில் இருந்து வெளியேறி இருவரும் நட்புகள் சூழ திருமணம் செய்துகொண்டனர்.
ஸீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் அறியப்பட்டவர் நடிகை ஷபானா. மலையாளியான ஷபானாவிற்கு தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் . தங்கள் வீட்டு பெண்ணாகவே ஷபானாவை பாவிக்கும் பல இல்லத்தரசிகளும் உண்டு. ஷபானா சமூக வலைத்தளங்களிலும் செம ஆக்டிவ் .
View this post on Instagram
ஷபானாவும் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ஆர்யனும் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததும் , இருவீட்டாரும் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் வீட்டில் இருந்து வெளியேறி இருவரும் நட்புகள் சூழ திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் ஷபானா ஒரு நேர்காணலில் தனது குடும்பத்தினர் குறித்தி மனம் திறந்தார். அதில் “என் அம்மா எப்போதுமே மத்தியம் இதை சாப்பிடுமா அப்படிங்குற மாதிரி என்கிட்ட சொல்லுவாங்க... மா.. நீ ஒரு இந்து பையன மட்டும் லவ் பண்ணிடாதமானு ..அதே மாதிரிதான் என் பாட்டியும் இந்து பையன் வேண்டாமான்னு ஒரு மெடிசன் மாதிரி சொல்லிக்கிட்டே இருப்பாங்க.. அவங்க இப்படி சொல்லுறதாலயே எனக்கு இந்து பையனதான் கல்யாணம் பண்ணனும்னு இருக்கு “ என்றார்.
பிரபலமாக இருந்தாலும் தனது வீட்டில் இருக்கும் மதவாதத்தினை வெளிப்படையாக போட்டுடைத்த ஷபானாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
ஷபானாவின் கணவர் ஆர்யன் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்பது நாம் அறிந்ததே . இந்த நிலையில் மனைவி நடிக்கும் ஸீ தமிழ் பக்கம் ஆர்யனும் களமிறங்கவுள்ளார். பிரபல தெலுங்கு சீரியலான ’ரத்தமா குத்துரு’ சீரியலின் தமிழ் ரீமேக்கில் ஆர்யன் லீட் ரோலில் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக மோக்ஷிதா நடிக்கிறார்.
இந்த சீரியல் அம்மா- மகள் சென்டிமெண்ட்டை அடிப்படையாக கொண்டது. இந்த புதிய சீரியல் மூலம் ஆர்யனும் - ஷபானாவும் ஒரே தொலைக்காட்சியின் கீழ் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.