Actor Samyuktha: ஆபாச வீடியோ... தினமும் பாலியல் தொல்லை.. விஷ்ணுகாந்த் மீது சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டு..
தன்னுடைய கணவர் விஷ்ணுகாந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக சீரியல் நடிகை சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தன்னுடைய கணவர் விஷ்ணுகாந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக சீரியல் நடிகை சம்யுக்தா திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பொதுவாக திரையுலகில் சேர்ந்து நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும், திருமணம் செய்வது என்பது வழக்கமான நடக்கும் ஒன்று தான். ஆனால் இதில் சிலர் தங்கள் இணையை பிரிந்த பிறகு ஒருவர் மீது ஒருவர் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். அந்த வரிசையில், சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் - நடிகை சம்யுக்தா ஜோடி இணைந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் திருமணம் முடிந்த ஒரு மாதம் கூட இருவரும் ஒன்றாக வாழவில்லை. இந்த தகவல் வெளியானதும் இதுதொடர்பாக சம்யுக்தாவும், விஷ்ணுகாந்தும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சாட்டினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போதைய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள சம்யுக்தா, “விஷ்ணுகாந்த் என்னையும், என்னோட பெற்றோரையும் மரியாதையாக நடத்தியது இல்லை. கால் மேல் கால் போட்டுக்கொண்டு இதை விட என்னால் பெரிதாக செய்ய முடியும் என சொல்லுவார்.
அவர் ஏன் என்னை கல்யாணம் பண்ணினார் என்றால், செக்ஸுக்காக மட்டுமே திருமணம் செய்தார் என நினைக்கிறேன். ஒரு மனைவியை எப்படி நடத்த வேண்டும் என தெரியவில்லை. 24 மணி நேரமும் பாலியல் எண்ணத்திலேயேதான் இருப்பார். நான் ஒரு பெண், எனக்கும் உணர்வுகள் இருக்கும் என நினைச்சது கூட இல்லை. நான் பாலியல் உறவில் ஒத்துழைக்கவில்லை என்றால் என்னை வேறு மாதிரி ட்ரீட் பண்ணுவார். இரண்டு பேரும் புரிந்து, இணைந்து பண்ணினால் மட்டுமே அது சரியாக இருக்கும்.
ஆனால் விஷ்ணுகாந்துக்கு நான் மனிதராக தெரியவில்லை. மிஷினாகவே தெரிந்திருக்கிறேன். பாலியல் வீடியோவை பார்த்து இந்த மாதிரி பண்ண வேண்டும் என்றும், நான் ஒத்துழைக்கவில்லை என்றால் அதற்கு தகுதியில்லாதவர் என சொல்லுவார். என்னால் முடியாது என சொன்னால், இந்த ரூம்ல கேமரா வைத்து நாம் இருவரும் இருக்கும் வீடியோவை போட்டு பார்க்கலாம் என சொல்லுவார். இதெல்லாம் என்னன்னு சொல்ல என்றே தெரியவில்லை. பாலியல் உறவு காரணமாக எனக்கு நோய் தொற்று ஏற்பட்டு விட்டது. அதை கூட விஷ்ணு காந்த் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை” என்று பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்