
Serial Actress Myna Kiss His Husband: காதலர் தினத்தில் காதல் கணவருக்கு நச்சுன்னு இச்சு கொடுத்த மைனா நந்தினி - வைரல் புகைப்படம்
Serial Actress Myna Kiss His Husband: மைனா நந்தினி தனது காதல் கணவரை முத்தமிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘வம்சம்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை நந்தினி. அதனை தொடர்ந்து 'கேடி பில்லா கில்லாடி'படத்தில் நடித்த அவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்தார்.
View this post on Instagram
இந்தக் கதாபாத்திரம் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. இதனிடையே அவர் சென்னையில் உடற்பயிற்சி நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் தொடர்ந்து சின்னத்திரைகளில் நடித்து வந்த நந்தினி, சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘நாயகி’ சீரியலில் நடித்த யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
View this post on Instagram
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்தத்தம்பதி சமூக வலைதளங்களில் தங்களது நடவடிக்கைகளை அவ்வப்போது பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் காதலர் தினமான நேற்று தனது காதல் கணவர் குறித்து மைனா நந்தினி உருக்கமான பதிவை பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “ லவ் யூ பாப்பா.. லவ் யூ.. நமக்கு பொண்ணு இருந்தா இந்த மாதிரி பையன்தான் வேணும்னு வேண்டி இருப்பேன். நீ கிடைச்சதுக்கு ஐ அம் சோ ஹேப்பி.. லக்கி.. காதலர் தின வாழ்த்துகள்” என்று பதிவிட்டதோடு, தனது கணவரை கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். இந்தப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

