மேலும் அறிய

Samyuktha - Vishnukanth: 15 நாள்களில் முடிந்த திருமண வாழ்க்கை... சீரியல் ஜோடி சம்யுக்தா- விஷ்ணுகாந்த் பிரிந்தது ஏன்? புதிய தகவல்கள்..!

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பிரபல சீரியல் தம்பதியினர் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் பிரிந்துள்ளதாக வெளியான செய்தியில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பிரபல சீரியல் தம்பதியினர் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் பிரிந்துள்ளதாக வெளியான செய்தியில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரியல் ஜோடியான ’ரீல் ஜோடி’

பொதுவாக சினிமா, சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் காதல் செய்வதும் காதலித்து திருமணம் செய்வது என்பதும் தொடர்கதையாக நடைபெற்று வரும் சம்பவமாகும். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். 

இருவரும் திருமண செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் சக நடிகர், நடிகைகள், ரசிகர்கள் எனப் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதனிடையே கடந்த சில நாட்களாகவே சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

ரசிகர்களை அதிர வைத்த பதிவு

இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த திருமண புகைப்படங்களை நீக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல், ஃபாலோ செய்வதையும் தவிர்த்தனர். இதனால் ரசிகர்கள் இருவரது பதிவிலும் கேள்வி மேல் கேள்வி எழுப்ப சம்யுக்தா இதற்கு பதிலளித்திருந்தார். அதன்படி அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ’டியர் ஹேட்டர்ஸ்.. நீங்கள் நினைத்தது நடந்து விட்டது. இனிமேல்தான் என் வாழ்க்கை தொடங்க இருக்கிறது. நீங்கள் கற்பனையே செய்யாத அளவுக்கு எல்லாம் நடக்கும். அதனால் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள தேவையான வலுவை பெற்று கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். 

விளக்கம் கொடுத்த விஷ்ணுகாந்த் 

இந்நிலையில் முதன்முறையாக இந்த சம்பவம் தொடர்பாக விஷ்ணுகாந்த் பதிலளித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த அவர், “மார்ச் 3ஆம் தேதி எங்களுக்கு திருமணம் நடந்தது. 10ஆம் தேதி நாங்கள் சென்னை வந்தோம். ஆனால் அடுத்த 15 நாள்கள் மட்டுமே என் வீட்டில் இருந்தார். நான் நல்லபடியாக இருக்க வேண்டுமென நினைத்து அவரது குடும்ப நிலையை சொல்லியதை எண்ணி கல்யாண செலவை நானே ஏற்றுக் கொண்டேன்.

நான் இவ்வளவு நாளாக பொறுமையாக இருந்த காரணம். இதெல்லாம் ஒரு பிரச்சினையா என நினைத்தது தான். என்னிடம், விட்டு விட்டு போய்விட்டார் என சொல்லப்பட்ட சம்யுக்தாவின் அப்பா தான் எல்லாத்துக்கும் காரணம். அவர் பேச்சைக் கேட்டு தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. 

சம்யுக்தா என்னிடம் ”என்னையும் அம்மாவையும் விட்டுட்டு போன அப்பாவை கல்யாணத்துக்கு கூப்பிட மாட்டேன். வீட்டிற்குள் விட மாட்டேன்” என சொன்னார். பின்னர் சம்பிரதாய முறைக்கு கூப்பிட்டோம். ஆனால் அவர் வந்ததில் இருந்து எல்லாம் மாறிவிட்டது.  நான் சம்யுக்தாவிடம் பேச முயற்சி செய்ததை அவரது அப்பா தடுக்கிறார். 

நான் சம்யுக்தாவின் அப்பாவிடம் கேள்வி எழுப்பினேன். எங்கள் இருவருக்கும் பெர்சனல் என்பதே இல்லை. அப்பாவின் வீடு அருகில் உள்ள நிலையில், காலை ஒரு முறை, மாலையில் ஒருமுறை என வருவார். அதிலும் பிரச்சினை நடந்தது. அதன்பிறகு என்னை விட அவரது தோழி தான் முக்கியம் என சொல்ல பிரச்சினை வெடித்தது. இவையெல்லாம் கல்யாணம் முடிந்து 15 நாட்களுக்குள் நடந்தது. நான் பலமுறை சம்யுக்தாவிடம் பேச முயற்சி செய்த நிலையில் அவர் இடம் கொடுக்கவில்லை. 

நான் அவரை துன்புறுத்தவும் இல்லை. இணையத்தில் பலரும் தவறாக சித்தரிக்கிறார்கள்” என விஷ்ணுகாந்த் கூறியுள்ளார். இதற்கு சம்யுக்தா விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
13 வயதில் ஊரை விட்டு வெளியேறியவர்.. இன்று இந்தியாவின் முதல் திருநங்கை ஜல்லிக்கட்டு காளை பயிற்சியாளர்
13 வயதில் ஊரை விட்டு வெளியேறியவர்.. இன்று இந்தியாவின் முதல் திருநங்கை ஜல்லிக்கட்டு காளை பயிற்சியாளர்
சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்
சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்
Vaiyapuri: மீம்ஸால் பறிபோன லோகேஷ் பட வாய்ப்பு.. விஜய் படத்தால் நடந்த சம்பவம்.. வையாபுரி வருத்தம்!
Vaiyapuri: மீம்ஸால் பறிபோன லோகேஷ் பட வாய்ப்பு.. விஜய் படத்தால் நடந்த சம்பவம்.. வையாபுரி வருத்தம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
Poonamallee-Vadapalani Metro rail : அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
Consecutive holidays : 3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
PROPERTY TAX TAMILNADU : சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
Embed widget