மேலும் அறிய

24 படங்களுக்குப் பிறகுதான் முதல் வெற்றி... சியான் விக்ரமின் போராட்ட பின்னணி!

24 படங்கள், கடுமையான விபத்து, பல ஆண்டுகள் போராட்டம்... இறுதியில் 'சேது' மூலம் வாழ்க்கையை மாற்றிய சியான் விக்ரமின் பயணம்.

இன்று தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்காக எந்த அளவுக்கும் தன்னை மாற்றிக்கொள்ளத் தயங்காத நடிகர் என்ற பெயரைப் பெற்றவர் சியான் விக்ரம். ஆனால் இன்று அவர் அனுபவிக்கும் வெற்றிக்குப் பின்னால், கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால போராட்டமும், தொடர்ச்சியான தோல்விகளும், உயிரையே பறித்துவிடும் அளவுக்கு மோசமான விபத்தில் இருந்து மீண்ட மன உறுதியும் மறைந்திருக்கிறதுபலருக்கும் ஆச்சரியமாக, விக்ரமுக்கு முதல் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது அவரது 24-ஆவது திரைப்படமான 'சேது' மூலம்தான்.

23 படங்கள் தோல்வி 

1990-ஆம் ஆண்டு வெளியான 'என் காதல் கண்மணி' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விக்ரம், அதன் பிறகு தந்து விட்டேன் என்னை, மீரா, காவல் கீதம், புதிய மன்னர்கள் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். அவரது நடிப்பு கவனிக்கப்பட்டாலும், அந்தப் படங்கள் எதுவும் அவருக்கு வணிக ரீதியாக பெரிய வெற்றியையோ, முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையோ பெற்றுத் தரவில்லை.

தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாததால், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தனது அதிர்ஷ்டத்தை சோதித்தார். மலையாளத்தில் த்ருவம், மாஃபியா, சைன்யம், ராஜபுத்ரன், இந்திரபிரஸ்தம், மயூரநிருத்தம், இது ஒரு ஸ்நேககாதா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தபோதும், பெரும்பாலும் துணைக் கதாபாத்திரங்களே அவருக்குக் கிடைத்தன.

தெலுங்கிலும் சிருநவ்வுல வரமிஸ்தாவா, பங்காரு குடும்பம், குர்ரால ராஜ்யம், 9 நேலாலு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அங்கும் எதிர்பார்த்த திருப்புமுனை கிடைக்கவில்லை. இதற்கிடையில் தனது சினிமா பயணத்தைத் தொடர்வதற்காக, அப்பாஸ், பிரபுதேவா, ஆரம்பகால அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்து வந்தார்.

விபத்து

இந்தப் போராட்டக் காலத்தில் விக்ரம் சந்தித்த மிகப்பெரிய சவால் சாலை விபத்துதான். கல்லூரி நாட்களில் நடந்த மோசமான விபத்தில் அவரது காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், இனி சாதாரணமாக நடப்பதே சிரமமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியதாக பல பேட்டிகளில் நினைவுகூர்ந்துள்ளார். இருப்பினும் சுமார் மூன்று ஆண்டுகள் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் மற்றும் பிஸியோதெரபி மூலம் மீண்டு, நடிகராக வேண்டும் என்ற தனது கனவை கைவிடாமல் தொடர்ந்து முயன்றார். அந்த விபத்தே அவரது சினிமா அறிமுகத்தையும் பல ஆண்டுகள் தள்ளிப்போனதாகவும் கூறப்படுகிறது.

முதல் வெற்றி

இப்படியாக சுமார் ஒன்பது ஆண்டுகள் போராடிய பிறகுதான் இயக்குநர் பாலா இயக்கிய 'சேது' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்தக் கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை கணிசமாகக் குறைத்து, தோற்றத்தையே மாற்றிக்கொண்டார். ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இல்லாமல் வெளியான அந்தத் திரைப்படம், பின்னர் ரசிகர்களின் வாய்மொழி பாராட்டால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காதலில் தோல்வியடைந்த இளைஞனாகவும், பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதராகவும் விக்ரம் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த ஒரே திரைப்படம் அவரது வாழ்க்கையையே மாற்றிய திருப்புமுனையாக அமைந்தது.

'சேது' வெற்றிக்குப் பிறகு தில், ஜெமினி, தூள், சாமி, காசி, பிதாமகன், அந்நியன் உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். குறிப்பாக 'பிதாமகன்' திரைப்படத்திற்காக தேசிய சிறந்த நடிகருக்கான விருதை வென்று, இந்திய அளவில் தனது நடிப்புத் திறனை நிரூபித்தார்.

அஜித் விஜய் போல் மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்த்தை எட்டாவிட்டாலும் தனது நடிப்பாலும் கடின உழைப்பாலும் தனக்கென இந்திய அளவில் ரசிகர்களை கொண்டிருக்கிறார் விக்ரம். 

Advertisement

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget