Cinema Headlines: தனுஷின் அடுத்த படத்தின் டைட்டில்... கங்குவா ரிலீஸ் தேதி.. இன்றைய சினிமா செய்திகள்
Sep 19 Entertainment Headlines : சூர்யாவின் கங்குவா பட ரிலீஸ் தேதி முதல் தனுஷின் புதிய பட டைட்டில் வரை இன்றைய சினிமா செய்திகளைப் பார்க்கலாம்
கங்குவா ரிலீஸ் தேதி
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. திஷா பதானி , யோகி பாபு , பாபி தியோல் , கருணாஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ரஜினியின் வேட்டையன் படமும் அதே நாளில் வெளியாக இருந்ததால் பின் கங்குவா படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. கங்குவா படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் .
தனுஷ் புதிய படத்தின் டைட்டில்
தனுஷின் வண்டர்பார்ஸ் பிக்ச்சர்ஸ் மற்றும் டான் பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படத்தை தனுஷ் இயக்குகிறார். தனுஷ், நித்யா மேனன் ,அசோக் செல்வன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் தனுஷ் நடிப்பில் உருவாகும் 52 ஆவது மற்றும் அவர் இயக்கத்தில் உருவாகும் 4 ஆவது படம். தற்போது இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு இட்லி கடை என்று தனுஷ் டைட்டில் வைத்துள்ளார். தற்போது தேனியின் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
லப்பர் பந்து படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன்
ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம் நாளை செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு எல்லா பக்கத்தில் இருந்து பாசிட்டிவான விமர்சங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது சிவகார்த்தியேன் படக்குழிவினரை பாராட்டியுள்ளார் . லப்பர் பந்து படத்தை பார்த்த எஸ்.கே படக்குழுவினரை நேரில் சந்தித்து படக்குழ்வினரை பாராட்டியுள்ளார்.
செப் 20 வெளியாகும் படங்கள்
நாளை செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்கு மற்றும் ஓடிடி தளங்களில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள லப்பர் பந்து , சசிகுமார் நடித்துள்ள நந்தன் , சீனு ராமசாமி இயக்கியுள்ள கோழி பண்ணை செல்லதுரை , ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள கடை உலகப்போர் ஆகிய நான்கு படங்கள் திரையரங்கில் வெளியாக இருக்கின்றன. இது தவிர்த்து தலைவெட்டியான் பாளையம் வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.
ஜானி மாஸ்டர்
பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் சக பெண் நடன கலைஞரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஜானி மாஸ்டருடன் பல படங்களில் பணியாற்றிய பெண்ணை அவர் மைனராக இருந்தபோதே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் திருமணம் செய்துகொள்வதாக சொல்லி அந்த பெண்ணை மதமாற்றம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும் பெண் புகாரளித்தார். வழக்குபதிவு செய்து காவல் துறையினர் தேடி வந்த ஜானி மாஸ்டர் தலைமறைவானார். இன்று செப்டம்பர் 19 ஆம் தேதி அவரை பெங்களூரில் வைத்து ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். இந்த நிகழ்வு சினிமாத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.