Selvaraghavan : ‛மேஸ்ட்ரோ யுவன்...’ இளையராஜா பட்டத்தை யுவனுக்கு வழங்கிய செல்வராகவன்!
"நானே வருவேன்" படத்தின் பின்னணி இசைக்காக மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவோடு இணைந்து பணிபுரிவதில் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளேன் என ஒரு ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ். தாணு தயாரிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள "நானே வருவேன்" படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்தின் பின்னணி இசைக்காக மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவோடு இணைந்து பணிபுரிவதில் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளேன் என ஒரு ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ளார் இயக்குனர் செல்வராகவன். மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது நானே வருவேன் படத்தின் பின்னணி இசை.
மீண்டும் இணையும் சகோதரர்கள்:
பத்து ஆண்டுகளுக்கு பிறகு திரையுலக சகோதரர்களான இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் இணையும் திரைப்படம் "நானே வருவேன்". இப்படம் செப்டம்பர் 29ம் வெளியிடப்படும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர் படக்குழுவினர். அந்த வகையில் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் ட்விட்டர் போஸ்ட்:
படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கும் இயக்குனர் செல்வராகவன் தற்போது ஒரு ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ளார். "நானே வருவேன்" படத்திற்காக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அவருடன் பணிபுரிவதில் மிகுந்த சந்தோஷம் எனும் ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார். படத்திற்கான பின்னணி இசைக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு யுவனின் இசை கூடுதல் சிறப்பு.
BACKGROUND SCORE !
— selvaraghavan (@selvaraghavan) September 13, 2022
Pure joy 💞 working with the Maestro 🤩#NaaneVaruvean @thisisysr@theVcreations @dhanushkraja pic.twitter.com/3knbWIADMT
ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியானது :
இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதோடு இயக்குனர் செல்வராகவனும் முதல் முறையாக திரையில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகிகளாக நடிகை இந்துஜா மற்றும் எல்லி அவ்ராம் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான வீர சூரா பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார் செல்வராகவன்.
Kaadellaam Un Arasangam 🏹💥#NaaneVaruvean Mode 🥁💯🔥@dhanushkraja @selvaraghavan @theVcreations
— งเຖ๏tђ ēຖ๏ςк 🎧 (@EnockVinoth) September 13, 2022
Make Way For The Massive Announcement 🔔⏳#NaaneVaruven pic.twitter.com/KRlskHLN5A
படத்தின் ரிலீஸ்க்காக தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மேலும் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான "திருச்சிற்றம்பலம்" படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து இப்படமும் வெளியாவதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.