Malayalam actresses harassed :புரமோஷன் நிகழ்ச்சியில் பாலியல் சீண்டலுக்கு ஆளான நடிகைகள் ! அதிர்ச்சியில் திரையுலகம்!
”ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும், கூட்டத்தில் இருந்த ஒருவர் என்னைப் பிடித்தார். எங்கே என்று சொல்ல நான் வெறுக்கிறேன்.”
பிரபல மலையாள நடிகைகள் சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் இருவரும் புரமோஷன் நிகழ்ச்சியில் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக தெரிவித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் , கோழிக்கோடு பகுதியில் உள்ள பிரபல மால் ஒன்றில் ‘சார்டர்டே நைட் ‘ என்னும் படத்தின் படப்பிடிற்காக படக்குழுவினர்களுடன் நடிகைகள் சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட கூட்டத்தில் நடிகைகள் இருவர் மீது பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக நடிகைகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததை தொடர்ந்து , படக்குழுவினர் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
இது குறித்து நடிகை கிரேஸ் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் கூறும்பொழுது ”எனது புதிய படத்தின் புரோமோஷனின் ஒரு பகுதியாக, கோழிக்கோடு ஹை லைட் மாலில் நடந்த புரோமோஷனுக்கு சென்று இருந்தோம். அங்கு எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. கோழிக்கோடு எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று. ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும், கூட்டத்தில் இருந்த ஒருவர் என்னைப் பிடித்தார். எங்கே என்று சொல்ல நான் வெறுக்கிறேன். இப்படி விரக்தியடைந்தவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்களா? இது என்னுடைய மிக மோசமான அனுபவம். என்னுடன் இருந்த மற்றொரு சக நடிகைக்கும் இதே அனுபவம் இருந்தது. நான் அந்த சம்பவத்தால் உறைந்து போய்விட்டேன்.இப்போது உங்கள் வியாதி தீர்ந்துவிட்டதா?" என கேள்வி எழுப்பினார்.
View this post on Instagram
நடிகை கிரேஸ் ஆண்டனி பதிவை போஸ்டாக ஷேர் செய்த நடிகை சானியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார், "நானும் எனது படக்குழுவினரும் எங்களின் புதிய திரைப்படமான 'சாட்டர்டே நைட் ' புரமோஷனில் இருந்தோம். அங்கு கோழிக்கோடு மக்களிடம் கிடைத்த அன்புக்கு நன்றி. அந்த நிகழ்வில் நிறைய கூட்டங்கள் இருந்தன. பாதுகாப்பிற்காக இருந்தவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டார்கள். நிகழ்ச்சிக்குப் பிறகு, எனது சக நடிகை ஒருவரிடம் சிலர் தவறாக நடந்துகொண்டார்கள், கூட்டத்தின் காரணமாக அவருக்குப் எதிர்வினையாற்ற கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு, இதேபோன்ற பெண் வெறுப்பு செயலை நானும் சந்தித்தேன்” என தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நடிகைகள் சமீப காலமாக இப்படியான சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியிருப்பது நடிகைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.