மேலும் அறிய

9 Years of Amara Kaviyam: கண்மூடித்தனமாக காதல்.. ஷாக் கொடுத்த கிளைமேக்ஸ்.. ‘அமர காவியம்’ ரிலீசாகி 9 வருஷமாச்சு..!

நடிகர் ஆர்யாவின்  தம்பி சத்யா ஹீரோவாக நடித்த ‘அமர காவியம்’ படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைகிறது, 

நடிகர் ஆர்யாவின்  தம்பி சத்யா ஹீரோவாக நடித்த ‘அமர காவியம்’ படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைகிறது, 

பெரும் எதிர்பார்ப்போடு  வெளியான படம் 

 2014 ஆம் ஆண்டு இயக்குநர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளியானது ‘அமர காவியம்’ படம்.  நடிகர் ஆர்யா தயாரிப்பில், அவரது தம்பி சத்யா ஹீரோவாக நடித்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த படத்தில் ஹீரோயினாக மியா ஜார்ஜ் அறிமுகமானார்.  ஜிப்ரான் இசையமைத்த இப்படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

படத்தின் கதை 

தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விடலைப் பருவ காதல் கதையை கையில் எடுத்திருந்தார் இயக்குநர் ஜீவா சங்கர். சத்யாவும், மியாவும் ஒரே பள்ளியில் படிக்கும் நிலையில், சத்யா நண்பனுக்கு மியா மீது காதல் ஏற்படுகிறது. காதலுக்குத் தூது போன இடத்தில் எதிர்பாராதவிதமாக மியா, சத்யாவை காதலிப்பதாக சொல்கிறார்.

நண்பனை ஏமாற்றுகிறோமே என்ற குழப்பத்துடன் காதலை ஏற்க, விதியின் வசத்தால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். குடும்பத்தினர் கட்டுப்பாட்டை மீற முயல பிரச்சினை போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது. மியா குடும்பமும் ஊரை விட்டு செல்கிறது. தன்னை மியா ஏமாற்றி விட்டதாக நினைக்கும் சத்யா அவரை கொலை செய்ய முடிவு செய்கிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும். 

ரசிகர்களை ஏமாற்றிய படம் 

விஜய் ஆண்டனி ஹீரோவாக அறிமுகமாக நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர், அமர காவியம் படத்தை அறிவிக்கும்போது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முதலில் இப்படத்தில்  அதர்வா நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் ஆர்யா தயாரிக்க, சத்யா ஹீரோவாக நடித்திருந்தார். 

இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக இரண்டரை மணி நேரம் ரசிகர்களின் பொறுமையை சோதித்திருந்தார்கள். நம்பகத்தன்மை இல்லாமல் உருவாக்கப்பட்ட காட்சிகள், செயற்கை இடைச்செருகலாக சேர்க்கப்பட்ட காதலர்களுக்கு இடையேயான சிக்கல்கள் என அனைத்தும் ரசிகர்களை ஏமாற்றியது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பலமாக அமைந்தது. அதேசமயம் கண்மூடித்தனமாக காதலிக்கும் ஒருவன் என்னவெல்லாம் செய்வான் என்பதை சத்யா அழகாக நடிப்பில் வெளிப்படுத்தியிருந்தார். மியாவுக்கும் நல்ல அறிமுகமாக இப்படம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: இன்று வெளியாகும் ட்ரெய்லர்..முரளிதரனை கண் முன் நிறுத்திய மோஷன் போஸ்டர்.. எதிர்பார்ப்புக்கு மத்தியில் 800 திரைப்படம்..!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Aachi Aachi Lyrics : மணிரத்னம் ரஹ்மான் கூட்டணியில் வெளியான இஞ்சி வெல்லம் பட பாடல் 'ஆச்சி ஆச்சி'...லிரிக்ஸ் இதோ
Aachi Aachi Lyrics : மணிரத்னம் ரஹ்மான் கூட்டணியில் வெளியான இஞ்சி வெல்லம் பட பாடல் 'ஆச்சி ஆச்சி'...லிரிக்ஸ் இதோ
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கு? மர்மம், திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் பயணம்!
ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கு? மர்மம், திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் பயணம்!
ஒரு இடத்தில் கூட என் பெயரை சொன்னதில்லை..அருண் விஜயின் ஜிம் டிரெய்னர் ஆதங்கம்
ஒரு இடத்தில் கூட என் பெயரை சொன்னதில்லை..அருண் விஜயின் ஜிம் டிரெய்னர் ஆதங்கம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
TN Weather News: சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Embed widget