மேலும் அறிய

Sarathkumar Birthday: 69 வயசாச்சா.. பிறந்தநாள் கொண்டாடும் சுப்ரீம் ஸ்டார்.. க்யூட் வாழ்த்து கூறிய மனைவி ராதிகா!

ஆக்‌ஷன் நாயகனாக தமிழ் சினிமாவில் பல்வேறு மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ள நடிகர் சரத்குமார், மற்றொரும் புறம் நடிகர் சங்கத் தலைவராகவும் வலம் வந்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்தார். 

கோலிவுட்டின் சுப்ரீம் ஸ்டாராகக் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமார் இன்று தன் 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் வில்லனாக தன் பயணத்தைத் தொடங்கி முக்கிய நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்தவர் நடிகர் சரத்குமார். 

பத்திரிகையாளர், பாடி பில்டர் என முதலில் தன் கரியரைத் தொடங்கிய சரத்குமார், சினிமாவைப் பொறுத்தவரை தெலுங்கில் தான் தன் திரைப்பயணத்தை முதன்முதலில் தொடங்கினார். தொடர்ந்து தமிழில் வில்லனாக நடிக்கத் தொடங்கிய சரத்குமார், மிகப்பெரும்  திருப்புமுனையாக அமைந்தது விஜயகாந்த் உடன் அவர் இணைந்து நடித்த புலன் விசாரணை திரைப்படம்.

தொடர்ந்து பல படங்களில் பல கோலிவுட் கதாநாயகர்களுக்கும் வில்லனாக நடித்துக் கலக்கிய நடிகர் சரத்குமார், மெல்ல மெல்ல சில ஆண்டுகளில் ஹீரோவாக முன்னேறத் தொடங்கினார். அதன் பின் ‘ஐ லவ் இந்தியா’, ‘ரகசிய போலீஸ்’, ‘சூரியன்’ என ஆக்‌ஷன் அவதாரம் எடுத்த சரத்குமார், சுப்ரீம் ஸ்டார் பட்டம் பெற்று தமிழ் சினிமாவில் கோலோச்சத் தொடங்கினார்.

கே.எஸ்.ரவிக்குமார் உடன் ‘புரியாத புதிர்’ திரைப்படம் தொடங்கி வெற்றிகரமான கூட்டணியாக சரத்குமார் வலம் வந்தாலும், 1997ஆம் ஆண்டு வெளியான ‘சூர்ய வம்சம்’ திரைப்படம் தான் அவருக்கு மெகா ஹிட் படமாக அமைந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெற்றுத்தந்தது.

அது முதல் ஆக்‌ஷன் நாயகனாக தமிழ் சினிமாவில் பல்வேறு மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ள நடிகர் சரத்குமார், மற்றொரும் புறம் நடிகர் சங்கத் தலைவராகவும் வலம் வந்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்தார். 

சமீபகாலமாக நல்ல குணச்சித்திரக் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து சரத்குமார் நடித்து வரும் நிலையில், போர் தொழில், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் இவரது கதாப்பாத்திரம் இன்றைய 2கே கிட்ஸ் ரசிகர்களையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளி வருகிறது.

கோலிவுட்டில் இப்படி 80களின் இறுதியில் தொடங்கி தற்போது வரை வெற்றிகரமாக வலம் வரும் சரத்குமார் இன்று தன் 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்நிலையில், சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார்  சரத்குமாரை வாழ்த்தி க்யூட்டான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். சிங்கம் போன்ற உறுதியான இதயத்தைக் கொண்ட சரத்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், உங்கள் விடாமுயற்சியை என்றும் கைவிடாதீர்கள். என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து உங்களுக்கு வாழ்த்துக்கள்” என ராதிகா பதிவிட்டுள்ளார். ராதிகாவின் இந்த க்யூட்டான பதிவு லைக்ஸ் அள்ளி வருகிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Radikaa Sarathkumar (@radikaasarathkumar)

நடிகைகள் ரம்பா, சுஜா வருணி உள்ளிட்ட பலரும் அவரது பதிவில் நடிகர் சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Embed widget