மேலும் அறிய

Sarath Babu Health: நடிகர் சரத்பாபு மறைந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை.. உடல்நிலை குறித்து சகோதரி விளக்கம்..!

நடிகர் சரத் பாபு இறந்து விட்டதாக வெளியான தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அவரது சகோதரி கூறியுள்ளார்.

நடிகர் சரத் பாபு இறந்துவிட்டதாக வெளியான தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அவரது சகோதரி கூறியுள்ளார். மேலும், அவர், ”எனது அண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்” என கூறியுள்ளார். நடிகர் சரத்பாபு ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் மறைந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அதையடுத்து நடிகர் சரத்பாபுவின் குடும்பத்தினர் அவரது உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளனர். 

தமிழ் மற்றும் தெலுங்கு, சினிமாக்களில் 70-களில் தொடங்கி முன்னணி நடிகராக விளங்கியவர் நடிகர் சரத்பாபு. 1951ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி ஆந்திராவில்  பிறந்தார். 1973-ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் 1977-ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான சரத்பாபு, ஒரு புறம்  கதாநாயகனாகவும் மற்றொருபுறம் ரஜினி, கமல் இருவருடனும் பல படங்களில் நடித்தும் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றார். 

 கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நிழல் நிஜமாகிறது படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார். மேலும் இந்தியா முழுவதும் பெரும் ஹிட் அடித்த ‘ஏக் துஜே கேளியே’ படத்தின் தெலுங்கு பதிப்பான  ‘மரோ சரித்ரா’ மற்றும் சலங்கை ஒலி உள்பட தன் தொடக்க காலத்தில் பல படங்களில் நடிகர் கமல்ஹாசனுடன் சரத் பாபு நடித்துள்ளார்.

ரஜினிகாந்துடன் அசத்தல்:

மற்றொருபுறம்  தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து என சூப்பர் ஹிட் படங்களில் நண்பராகக் கலக்கி, ரஜினி, கமலின் நண்பர் பாத்திரம் என்றால் இவர்தான் என ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சரத்பாபு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடனும், முக்கிய இயக்குநர்களின் படங்களிலும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் சரத்பாபு நடித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி:

சினிமாவில் அவ்வப்போது குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சரத்பாபு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இறுதியாக தெலுங்கில் பவன் கல்யாண் உடன் வக்கீல் சாப் படத்திலும் தமிழில் டாக்டர் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், சரத்பாபுவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் 71 வயதாகும் சரத்பாபு உடல்நலக்குறைவால் இறந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை என அவரது சகோதரி கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?

Embed widget