மேலும் அறிய

Suriya: சூர்யா தான் இதுக்கு சிறந்த சாய்ஸ்.. அனிமல் பட இயக்குநரின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் புறநாநூறு படத்தின் நடித்து வருகிறார்.

ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற அனிமல் படத்தின் தமிழ் ரீமேக்கில் சூர்யாவை நடிக்க வைப்பேன் என்று இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கூறியுள்ளார்.

அனிமல்

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் சர்ச்சைக்குரிய இயக்குநராக பேசப்பட்டவர் சந்தீப் ரெட்டி வங்கா. கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான அனிமல் படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.900 கோடிகளை வசூல் செய்தது. பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். அர்ஜூன் ரெட்டி படத்தைப் போலவே அனிமல் படமும் விமர்சனங்களை எதிர்கொண்டது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் பல பிரபலங்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை கொண்டிருப்பதாக இந்தப் படத்தின் மீது சமூக ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். 

ஆனால், விமர்சனங்களையெல்லாம் கடந்து அனிமல் படம் தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்பட ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னை வந்திருந்தார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்த விழாவின் போது நடிகர் சிவகார்த்திகேயன் சந்தீப் ரெட்டி வங்காவை பாராட்டிப் பேசியது குறிப்பிடத் தக்கது.

அனிமல் பட ரீமேக்கில் சூர்யா

இதே நிகழ்ச்சியில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் அனிமல் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் யாரை நடிக்க வைப்பார் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில், அனிமல் படத்தில் தமிழில் ரீமேக்  நடிக்க சூர்யா தான் பொருத்தமான ஆள் என அவர் தெரிவித்தார். அவரது இந்த பதில் சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அனிமல் படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தை இயக்க இருக்கிறார் சந்தீப். ஹாரர் திரைப்படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. சுமார்  ரூ.250 கோடிகள் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

சூர்யா 43

சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் புறநாநூறு படத்தின் நடித்து வருகிறார். துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா நஸிம் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Kashmir: காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; பஹல்காம் தாக்குதலில் தொடர்பா என விசாரணை
Kashmir: காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; பஹல்காம் தாக்குதலில் தொடர்பா என விசாரணை
EPS-PM Modi : ’பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
’பிரதமருடன் EPS சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
America on Aug.,1 Tariffs: போச்சு.!! 1-ம் தேதில இருந்து எல்லாரும் கப்பம் கட்டித்தான் ஆகணும்; உறுதி செய்த அமெரிக்கா - ஆனா...
போச்சு.!! 1-ம் தேதில இருந்து எல்லாரும் கப்பம் கட்டித்தான் ஆகணும்; உறுதி செய்த அமெரிக்கா - ஆனா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்
பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj
ஹன்சிகாவுக்கு விவாகரத்து?உண்மையை உடைத்த கணவர் இதுதான் காரணம்? | Sohael Khaturiya | Hansika Motwani Marriage | Tamil Cinema

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kashmir: காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; பஹல்காம் தாக்குதலில் தொடர்பா என விசாரணை
Kashmir: காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; பஹல்காம் தாக்குதலில் தொடர்பா என விசாரணை
EPS-PM Modi : ’பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
’பிரதமருடன் EPS சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
America on Aug.,1 Tariffs: போச்சு.!! 1-ம் தேதில இருந்து எல்லாரும் கப்பம் கட்டித்தான் ஆகணும்; உறுதி செய்த அமெரிக்கா - ஆனா...
போச்சு.!! 1-ம் தேதில இருந்து எல்லாரும் கப்பம் கட்டித்தான் ஆகணும்; உறுதி செய்த அமெரிக்கா - ஆனா...
Safest Cars: சேஃப்டிக்காக நிரம்பி வழியும் கேஜட்ஸ்..! நம்மூரில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்கள் - நாலா பக்கமும் பாதுகாப்பு
Safest Cars: சேஃப்டிக்காக நிரம்பி வழியும் கேஜட்ஸ்..! நம்மூரில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்கள் - நாலா பக்கமும் பாதுகாப்பு
Parliament Op Sindoor: இன்னைக்கு இருக்கு.. எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல்? சமாளிக்குமா பாஜக? திருப்பி விடுமா?
Parliament Op Sindoor: இன்னைக்கு இருக்கு.. எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல்? சமாளிக்குமா பாஜக? திருப்பி விடுமா?
Top 10 News Headlines: வீடுகளை சூழ்ந்த காவிரி வெள்ளம், ஆபரேஷன் சிந்தூர்-இன்று விவாதம், புதிய சாதனை படைத்த சுப்மன் கில் - 11 மணி செய்திகள்
வீடுகளை சூழ்ந்த காவிரி வெள்ளம், ஆபரேஷன் சிந்தூர்-இன்று விவாதம், புதிய சாதனை படைத்த சுப்மன் கில் - 11 மணி செய்திகள்
Tamilnadu Roundup: பிரதமரிடம் முதல்வர் மனு, காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை, அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் - 10 மணி செய்திகள்
பிரதமரிடம் முதல்வர் மனு, காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை, அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் - 10 மணி செய்திகள்
Embed widget