Rajinikanth: ’உன்ன பயன்படுத்த நிறைய முதலை காத்திருக்கு..’ : ரஜினிகாந்துக்கு வீரப்பன் கொடுத்த அட்வைஸ்.. Zee5 தொடரால் பரபரப்பு
வீரப்பன் பற்றி உருவாகி இருக்கும் ஆவணப்படத்தில் ரஜினிகாந்த் குறித்து வீரப்பன் பேசியது வைராகி வருகிறது

கூசெ முனிசாமி வீரப்பன்
சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள அவணப்படம் கூஸ் முனிசாமி வீரப்பன். ஆர்.வி. பாரதி தயாரிப்பில் சரத் ஜோதி இயக்கத்தில் டிசம்பர் 8ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வீரப்பனின் ஆவணப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்தப் ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களின் கவணத்தை ஈர்த்தது. இதுவரை வெளியாகாத வீரப்பன் பேசும் பல வீடியோக்கள் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருப்பது பேசுபொருளாகி உள்ளது. இந்த காணொளிகளில் வீரப்பன் பல்வேறு விஷயங்களை பேசுகிறார். அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து வீரப்பன் பேசிய சிறிய பகுதி ஒன்றை நேற்று ரஜினியின் பிறந்தநாளன்று ஜீ ஃபை வெளியிட்டது.
ரஜினிக்கு வீரப்பன் கொடுத்த அட்வைஸ்
கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அன்றைய முதலைமச்சர் ஜெ ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். தமிழ் நாட்டு மக்களை வேறு யாராலும் காப்பாற்ற முடியாது என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு 2021 தேர்தலில் போட்டியிட இருப்பதாக அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப் பட்டன. தொடர் விமர்சனங்களுக்குப் பிற்கு அரசியலுக்கு வரும் முடிவை இன்னும் சில காலத்திற்கு தள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.
Veerappan's message to Rajinikanth!#KooseMunisamyVeerappan Premieres on Dec 14 #HBDSuperstarRajinikanth #HappyBirthdaySuperstarRajinikanth #HBDRajinikanth #VeerappanOnZEE5 #UnseenVeerappanTapes #Veerappan #ZEE5Tamil #ZEE5 pic.twitter.com/DBvtojfGxp
— ZEE5 Tamil (@ZEE5Tamil) December 12, 2023
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டில் வீரப்பன் காலத்தில் இருந்தே நடந்து வரும் நெடும் விவாதம். கூஸ் முனிசாமி ஆவணப்படத்தில் வீரப்பன் இப்படி கூறியுள்ளார் ‘ எம் ஜி ஆர் பல கஷ்டங்களை வாழ்க்கையில் சந்தித்து இந்த நிலைக்கு வந்தவர். அவரால் மக்களின் கஷ்டங்களை புரிந்துகொள்ள முடியும் . எம் . ஜி . அர் போல் இன்னொருவர் வருவது கஷ்டம்தான் . ஆனால் ரஜினிகாந்தை பார்க்கும் போது அவர் எம் ஜி ஆர் போல் வருவார் என்று எனக்கு தெரியும். ரஜினி மிக எளிமையானவர். யாரையும் குறை சொல்லாதவர். தீவிர கடவுள் பக்தி கொண்டவர். ரஜினிகாந்த் உங்களை பயன்படுத்திக் கொள்ள இங்கு நிறைய முதலைகள் காத்திருக்கின்றன. அதனால் கவணமாக இருங்கள்” என்று வீரப்பன் கூறியிருக்கிறார்.
வேட்டையன்
த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்திற்கு வேட்டையன் என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளது. அமிதாப் பச்சன், ரானா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து அனிருத் இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

