Samantha: வாங்கிய முன்பணத்தை திருப்பி கொடுத்த சமந்தா? சினிமாவில் இருந்து மீண்டும் ப்ரேக்? - இதுதான் காரணமா?
நடிகை சமந்தா தசை அழற்சி நோயில் இருந்து மீண்டு தற்போது படத்தில் நடித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு வருட பிரேக் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய படங்களில் ஒப்பந்தமாக மாட்டார் என்றும் இந்த நாட்களில் அவர் தனது உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இடைவெளி எடுக்கவுள்ளதால் சில தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கிய முன் பணத்தையும் திருப்பி கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
View this post on Instagram
நடிகை சமந்தா, சில மாதங்களுக்கு முன் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் நடித்து வந்த ‘குஷி’ உட்பட சில படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவர் குணமடைந்த பின், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அதில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மீண்டும் நடித்தார் சமந்தா.
பின்னர் ‘சிட்டாடெல்’ வெப் தொடர் படப்பிடிப்புக்காக செர்பியா சென்றார். அங்கு வருண் தவணுடன் படப்பிடிப்பில் பங்கேற்றார். பின் இந்தியா திரும்பிய சமந்தா தற்போது ‘குஷி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து விடும் என கூறப்படுகிறது. ராஜமுந்திரியில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படபிடிப்பு தளத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
படத்தில் காதலர்களாக நடிக்கும் விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் இந்த கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஷிவ நிர்வாணா இயக்கி வருகிறார். இந்த காட்சியுடன் ஷூட்டிங் நிறைவடைவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைக்கிறார். செப்டம்பர் ஒன்றாம் தேதி குஷி திரைப்படம் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க
“அதிமுக உடையவும் இல்லை; சிதறவும் இல்லை” - மதுரை மாநாட்டிற்கான இலட்சினை வெளியிட்டார் இபிஎஸ்