Samantha | ”நீங்க மட்டும் இல்லைனா ... “ - சமந்தாவின் மகிழ்ச்சிக்கு காரணமான நண்பர்கள் இவங்கதானாம்!
சமந்தாவின் பெரும்பாலான படங்களில் அவருக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார். சின்மயின் கணவர்தான் ராகுல் ரவீந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பவர் நடிகை சமந்தா. தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். ஏற்கனவே தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் , தெலுங்கில் சாகுந்தலா உள்ளிட்ட திரைப்படங்க்ள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. விவாகரத்திற்கு பிறகு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது நாய்க்குட்டி , நண்பர்கள் , விடுமுறை கொண்டாட்டம் , உடற்பயிற்சி என தனக்கான நேரத்தை அதிகமாக செலவிட்டு வருகிறார். அதிகமாக நண்பர்களுடன் புகைப்படத்தை பகிர்ந்து வரும் சமந்தா தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சமந்தா சோம்பலாக சோஃபாலில் சாய்ந்துக்கொண்டிருக்கிறார். அருகில் நடிகர்கள் வெண்ணெலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திரா ஆகியோர் சோஃபாவில் அமர்ந்திருக்கிறார்.இதனை பகிர்ந்த சமந்தா “நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன் “ என குறிப்பிட்டு அவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்.
சின்மயி மற்றும் சமந்தா இருவரும் நெருங்கிய நண்பர்கள்.சமந்தாவின் பெரும்பாலான படங்களில் அவருக்கு சின்மயி குரல் கொடுத்துள்ளார். சின்மயின் கணவர்தான் ராகுல் ரவீந்திரா என்பது குறிப்பிடத்தக்கது. வெண்ணெலா கிஷோர் தெலுங்கில் பிரபலமான காமெடி நடிகர் ஆவார்.
View this post on Instagram
சமந்தா தற்போது யசோதா என்னும் பை-லிங்குவல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து பாலிவுட்டில் டாப்ஸி தயாரிக்கும் ஒரு படத்திலும் ஃபேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் இயக்குனர் பிலிப்ஜான் என்பவரின் இயக்கத்தில் உருவாக உள்ள வெப்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தாவும் தனது சமூக வலைத்தள பக்கங்களின் ஷேர் செய்திருந்தார். இந்த வெப்தொடரை தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஓ பேபி’ என்ற படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.