பெண்கள் கிட்ட மட்டும் ஒழுக்க கேள்வி கேக்குறீங்களா? - சமந்தாவின் இன்ஸ்டா போஸ்ட்
பெண்களுக்கு மட்டும் ஒழுக்கம் சார்ந்த கேள்விகளை வெச்சிட்டு, ஆண்கள் கிட்ட அதை கேக்கலன்னா, சமூகத்துக்கு ஒழுக்கத்தைப் பத்தி பேச தகுதி இல்லை” என்னும் Quote-ஐ Instagram Stories-இல் பகிர்ந்தார் சமந்தா.
நாக சைதன்யாவைப் பிரிந்ததாக அறிவித்த சமந்தா, நேற்று பதித்த அவரது இன்ஸ்டகிராம் போஸ்ட்டில் பழைய காதல், பழைய பாடல்கள் இவையெல்லாம் என வெள்ளை உடையுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து பதிவிட்டிருந்தார். இன்று காலை அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் செய்துள்ள ஒரு Quote கார்டில், “பெண்களை மட்டும் ஒழுக்கம் சார்ந்த கேள்விகளுக்கு உட்படுத்தி, ஆண்களிடம் ஒழுக்கம் சார்ந்த கேள்விகளை வைக்கவில்லையென்றால், இந்த சமூகமே ஒழுக்கக்கேடானது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது” என்னும் ஃபரிடாவின் வாசகத்தைப் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கும் எவரு மிலோ கோடிஸ்வரலு (கோன் பனேகா குரோர்பதி - தெலுங்கு அத்தியாயம்) என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொள்கிறார். விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு நடிகை சமந்தா முகம் காட்டும் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களிடையே இந்நிகழ்ச்சி கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களை திறந்தாலே சமந்தா, நாக சைத்தன்யாவின் பிரிவு செய்தியாகவே உள்ளது. டோலிவுட்டின் Most Romantic Couples ஆக இருந்தவங்களுக்கு என்னதான் ஆச்சு ? ஏன் திடீரென இப்படி முடிவெடுத்துட்டாங்க என இருவரின் ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இப்போது இன்னொரு வீடியோவும் வைரலாகி வருகிறது. “பள்ளி காலங்களிலும், இளங்கலை படிப்பிலும் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றேன். ஆனால், அடுத்து என்னால் மேற்படிப்பை தொடர முடியவில்லை. எனது குடும்ப சூழல் அதற்கு ஒரு முக்கிய காரணம். என்னுடைய பெற்றோர்களால் என் படிப்புக்கு அதிக தொகையை செலவழிக்க முடியவில்லை. எனக்கென தனியாக எந்த கனவையும், குறிக்கோளையும் நான் வைத்திருக்கவில்லை. குடும்ப சூழல் காரணமாக பொருள் ஈட்ட கடினமான சின்ன சின்ன வேலைகளை கூட செய்தேன். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டு சமாளித்து வந்தேன். அப்போது தான் மாடலிங் சென்றால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கேள்விப்பட்டேன். வாய்ப்பும் கிடைத்தது. அதன் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தேன்” என அவர் கூறினார்.
அந்த வீடியோ இதோ..
She proves to be my inspiration each and everyday. Not only by her words but also by her actions ✨. She is not just an example , a perfect role model 🔥.
— Prachi_Samantha (@Prachi96773628) October 3, 2021
We love you @Samanthaprabhu2 ❤. #WeLoveYouSamantha #Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/DEa1SM2n0W