Watch Video: 'புஷ்பா பாடலில் ஆட கடும் எதிர்ப்பு.. எக்ஸ்ப்ளோர் பண்ண ஆசைப்பட்டேன்..' மனம் திறந்த சமந்தா..!
ஐட்டம் பாடல் எல்லாம் உனக்கு தேவையில்லை அதுவும் விவாகரத்து பற்றின அறிவிப்பை வெளியிட்ட பிறகு அது கண்டிப்பாக தேவை இல்லை என அனைவருமே ஓ அண்டாவா பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் - சமந்தா
தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்த ஒரு நடிகை சமந்தா. இவரது நடிப்பில் லேட்டஸ்ட்டாக வெளியான 'யசோதா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்தாக சமந்தாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'சாகுந்தலம்'.
சாகுந்தலம்:
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்கியுள்ளார் தெலுங்கு திரையுலக இயக்குனர் குணசேகரன். ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சாகுந்தலம் புரொமோஷன் :
அந்த வகையில் நடிகை சமந்தா சாகுந்தலம் படத்தின் புரொமோஷன் பணிக்காக நேர்காணலில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி அவர் பங்கேற்ற ஒரு நேர்காணலில் புஷ்பா: தி ரைஸ் படத்தில் இடம்பெற்ற 'ஊ அண்டாவா...' பாடலுக்கு அவர் நடனமாட அவருக்கு வந்த எதிர்ப்புகள் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியிருந்தார் நடிகை சமந்தா.
சர்வதேச அளவில் ரீச் கொடுத்த பாடல் :
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பான் இந்திய படமாக வெளியான திரைப்படம் புஷ்பா : தி ரைஸ். பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த இப்படத்தில் இடம்பெற்ற "ஊ அண்டாவா..." என்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார்.
பட்டி தொட்டி மட்டுமின்றி சர்வதேச அளவில் இப்பாடல் ரீச் ஆனதோடு நடிகர் சமந்தா புகழின் உச்சத்திற்கு சென்றார். அந்த அளவிற்கு சமந்தாவை பிரபலப்படுத்திய இந்த பாடலில் அவர் நடிக்க ஏராளமான எதிர்ப்புகள் வந்தது என்பது குறித்து சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் பேசியிருந்தார்.
எதிர்ப்புகளை உடைத்த சமந்தா :
'ஊ அண்டாவா... பாடலுக்கு நான் சம்மதம் தெரிவித்ததை எந்த இடத்திலும் கைவிட நினைக்கவில்லை. என்னுடைய விவாகரத்து குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில் என்னுடைய குடும்பத்தார், நல விரும்பிகள், நெருங்கிய நட்பு வட்டாரங்கள் என அனைவருமே ஐட்டம் பாடலில் நான் நடிக்க எதிர்ப்பு தெரிவித்தார்கள். நீ அமைதியாக போய் ஒரு மூலையில் இரு.
ஐட்டம் பாடல் எல்லாம் உனக்கு தேவையில்லை அதுவும் விவாகரத்து பற்றின அறிவிப்பை வெளியிட்ட பிறகு அது கண்டிப்பாக தேவை இல்லை என்றார்கள். இது வரையில் நீ தைரியமாக வெவ்வேறு கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடி, சூப்பர் டீலக்ஸ் போன்ற வித்தியாசமான ரோல்களை செய் என என்னை ஊக்குவித்த எனது நெருங்கிய நட்பு வட்டம் கூட நான் ஐட்டம் சாங் செய்யப்போகிறேன் என தெரிந்ததும், நோ அதை மட்டும் செய்யாதே! என கேட்டுக்கொண்டார். ஆனால் ஓ அப்படியா நான் நிச்சயம் ஐட்டம் சாங் செய்யப்போகிறேன் என செய்தேன்" என்றார்.
Samanthaa about #Ooantava song during her promotional interviews for Shaakuntalam
— Jegan | #ShaakuntalamOnApril14 (@JeganSammu) March 29, 2023
“ Why should I hide , I didn't do anything wrong ❤. it was just another character i was playing ”#Shaakuntalam #SamanthaRuthPrabhu #ShaakuntalamOnApril14 pic.twitter.com/d7q1Prbrl3
எக்ஸ்ப்ளோர் செய்ய ஆசை:
மேலும் சமந்தா தொடர்ந்து பேசுகையில் "இது வரையில் நான் ஐட்டம் சாங் செய்ததில்லை. அதை நான் ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாகவே பார்த்தேன். எனக்கு புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் எக்ஸ்ப்ளோர் செய்ய வேண்டும் என ஆசை. அதனால் வெரைட்டியான கதாபத்திரங்களில் நடிக்க வேண்டும் என ஆசை. இந்த பாடலை நான் ஒரு கதாபாத்திரமாகவே நினைத்தேன். ஐட்டம் பாடலில் நான் நடிப்பதனால் நான் அப்படி நடந்து கொள்வேன் என்ற அர்த்தம் கிடையாது. எப்படி புதுப்புது ரோல்களில் நடிப்பேனோ அப்படி தான் அதை பார்த்தேன். இதுவரையில் நான் இதை ட்ரை செய்யவில்லை அதனால் நான் செய்யப்போகிறேன். அப்படி தான் நான் ஊ அண்டாவா... பாடலையும் பார்த்தேன்" என தெளிவான விளக்கத்தை கொடுத்தார் நடிகை சமந்தா.