Samantha Dance Video: 'ஓ சொல்றியா மாமா' ரிகர்சலே ரகளையா இருக்கே.! சமந்தாவின் வைரல் டான்ஸ் வீடியோ!
புஷ்பா படத்தில் இடம்பெற்ற o solriya oo oo solriya பாடலுக்கு ரிகர்சல் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம் வரும் சுகுமார் இயக்கத்தில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் நடிகர் ஃபஹத் வில்லனாக நடித்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் , படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தன.
குறிப்பாக சமந்தாவின் முதல் ஐடம் சாங்கான o solriya oo oo solriya பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தியேட்டரில் இவர் ஆடிய நடன அசைவுகள் ஒட்டுமொத்த திரையரங்கையும் கட்டிப்போட்டுவிட்டது என்றே சொல்லலாம். இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ, ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் பக்கத்தில் உலக அளவில் நம்பர் 1 என்ற அந்தஸ்தை பெற்றது.
பல மொழிகளிலும் இந்த லிரிக்கல் வீடியோ மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. லிரிக்கல் வீடியோவே மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், வீடியோ பாடல் ஏகோபித்த வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு சமந்தா ரிகர்சல் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.
முன்னதாக இந்தப் பாடலில் ஆண்களை கொச்சைப்படுத்தும் வகையில் வரிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு ஆண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த பாடல் குறித்து அல்லு அர்ஜூன் கூறும் போது, “சமந்தா காரு இந்த பாடலை செய்ததற்கு மிக்க நன்றி. நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகத்தான் இந்த பாடலை நீங்கள் செய்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், எனவே அதற்கு நன்றி. இதை செய்வது சரியா தவறா என்று உங்களுக்கு எத்தனை சந்தேகங்கள் இருந்தது அது எனக்கு படப்பிடிப்பின் போதே தெரிந்தது.அதனால்தான் உங்களிடம் ஒன்று மட்டும் சொன்னேன் ’என்னை நம்பி இதை செய் ’ என்றேன். அதன் பிறகு என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.எல்லாவற்றையும் செய்ததற்கு நன்றி. நீங்கள் என் இதயத்தையும் மரியாதையையும் வென்றுள்ளீர்கள்” என கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்