Samantha Airport Pics | ”foreign போறேன் bye" - ஏர்போர்ட் ஃபோட்டோக்களை ஷேர் செய்த சமந்தா..!
ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பிய சமந்தா தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு தயாராகிவிட்டார்.
பொதுவாகவே நடிகர் நடிகைகளின் விவாகரத்திற்கு பிறகான வாழ்க்கை கூர்ந்து கவனிக்கப்படும். காரணம், திரைத்துரை வட்டாரத்தில் நெருக்கமாக இருந்த தம்பதிகள் திடீரென ஏன் விவாகரத்து செய்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து ரசிகர்களுக்கு இருக்கும் பொதுவான கியூரியாசிட்டி. இது அவர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை பிரச்சனையாக இருந்தாலும் , அவர்கள் மீது அன்புக்கொண்ட ரசிகர்களுக்கு இது கவலை கலந்த ஏக்கமாகத்தான் இருக்கிறது. அப்படி பலருக்கும் பிடித்தமான காதல் தம்பதிகள்தான் சமந்தாவும், நாக சைத்தன்யாவும். விவாகரத்தை அறிவிக்கும் பொழுது, கணவன் மனைவி என்னும் பந்தத்திலிருந்து விலகுகிறேமே தவிர , ஒருவர் மீது ஒருவர் கொண்ட நட்பு மாறாது என குறிப்பிட்டிருந்தனர்.
விவாகரத்து பெற்றபிறகு சமுதாயத்தில் பெண் எதிர்க்கொள்ளும் சவால்கள் அதிகம்தான் அது செலிபிரிட்டிகளையும் அது விட்டு வைப்பதில்லை. சொல்லப்போனால் சற்று கூடுதலாகவே கிசு கிசுக்கப்படுகிறது. அந்த வகையில் விவகாரத்திற்கான காரணங்களாக சமந்தா எதிர்க்கொண்ட விஷயங்கள் ஏராளம்.
View this post on Instagram
கருக்கலைப்பு முதல் ஆண் நண்பர்களுடன் தொடர்பு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சமந்தா மீது பாய்ந்தன. இதற்கு பதில் சொல்லும் விதமாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில பதிவுகளை ஷேர் செய்தார் சமந்தா. ஆனாலும் பல யூடியூப் நிறுவனங்கள் தொடர்ந்து அவர் குறித்து அவதூறு பரப்புகிறார்கள் என அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். நீதிபதி, தண்டனை பெற்று தர நீதி மன்றத்தை நாடியதற்கு பதிலாக , மன்னிப்பு கேட்க சொல்லியிருக்கலாம் என சமந்தாவிற்கு அறிவுரைகளை வழங்கினார். இந்நிலையில் மன அமைதி வேண்டி , வட இந்தியாவில் ஆன்மீக பயணம் மேற்கொண்டார் சமந்தா. கங்கோத்ரி , பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு தனது நெருங்கிய நண்பர்களுடன் விசிட் அடித்தார். அந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பிய சமந்தா தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு தயாராகிவிட்டார்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார் சமந்தா. அந்த புகைப்படத்தில் சாதனா சிங் என்னும் மேக்கப் கலைஞருடனும், ப்ரீத்தம் ஜுகல்கர் என்னும் ஆடை வடிவமைப்பாளருடனும் போஸ் கொடுத்துள்ளார். மேலும் தான் வெளிநாடு செல்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். ப்ரீத்தம் ஜுகல்கருடன் சமந்தா காதல் வயப்பட்டிருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதனை சமந்தா கண்டுகொள்ளவே இல்லை.ப்ரீத்தம் இது குறித்து விளக்கமளித்தார். அதில் அவர் தனது சகோதரி என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் சமந்தாவின் ஆண் நண்பராக இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் அவர் ஒரு தன் பால் ஈர்ப்பாளர் என நடிகை ஸ்ரீரெட்டி கூறியதும் குறிப்பிடத்தக்கது.