![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Samantha & Chinmayi : ”இனி சமந்தாவுக்கு டப்பிங் பேசமாட்டேன் “ : சின்மயி சொன்னதற்கு காரணம் இதுதான்..!!
அவரது நடிப்பை பற்றி விமர்சனம் செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் தனிமனித தாக்குதலை விடுங்கள் . கொஞ்சம் மரியாதையுடன் நடந்துக்கொள்ளுங்கள் “ என சமந்தாவிற்கு ஆதரவாக நின்றார்
![Samantha & Chinmayi : ”இனி சமந்தாவுக்கு டப்பிங் பேசமாட்டேன் “ : சின்மயி சொன்னதற்கு காரணம் இதுதான்..!! Samantha & Chinmayi No Longer On Good Terms netizens confusing on social media Samantha & Chinmayi : ”இனி சமந்தாவுக்கு டப்பிங் பேசமாட்டேன் “ : சின்மயி சொன்னதற்கு காரணம் இதுதான்..!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/06/8930c0825ab6cc4cf307fe6ea2c0ff381662450953691224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகராகவும் , டப்பிங் கலைஞராகவும் இருந்து வருபவர் சின்மயி. இவரும் நடிகை சமந்தாவும் நெருங்கிய தோழிகள் . சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் சமந்தாவிற்கு குரல் கொடுத்தவர் சின்மயிதான். அவரின் நடிப்பிற்கு சின்மயியின் குரல் பக்கபலமாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. அங்கிருந்து தொடங்கிய இவர்களது நட்பு , திரைக்கு பின்னாலும் நீண்டது. சின்மயி சமந்தாவிற்கு மட்டுமல்ல காஜல் , தமன்னா உள்ளிட்ட நடிகைகளுக்குமே டப்பிங் செய்துள்ளார்.
இந்த நிலையில் இனிமேல் தான் சமந்தாவிற்கு டப்பிங் செய்யமாட்டேன் என சின்மயி தெரிவித்திருக்கிறார். காரணம் சமந்தாவே தனது படங்களுக்கு குரல் கொடுப்பதுதான் என்கிறார் சின்மயி. இது குறித்து கூறிய அவர் “என்னுடைய நெருங்கிய தோழியான சமந்தா தற்போது தனக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார். அதனை சிறப்பாகவே செய்கிறார். அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டேன், இனி சமந்தாவுக்கு டப்பிங் செய்யும் அவசியமில்லை. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது’’ என தெரிவித்துள்ளார். இதன் மூலம் சமந்தாவிற்கும் சின்மயிக்கும் ஏதோ வருத்தம் இருக்கிறது என நெட்டிசன்கள் கிசுகிசுக்க துவங்கிவிட்டன. அதனை சின்மயி வெளிப்படையாக கூறமால் மறைமுகமாக கூறியிருக்கிறாரோ என பேச தொடங்கியுள்ளனர். சமீபகாலமாக சின்மயி சமந்தாவுடனான புகைப்படங்களையும் கூட பகிரவில்லை என பேசத்தொடங்கியுள்ளனர்.
View this post on Instagram
சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்தமைக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களில் சின்மயியும் ஒருவர். “சமந்தா துணிச்சலாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பை பற்றி விமர்சனம் செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் தனிமனித தாக்குதலை விடுங்கள் . கொஞ்சம் மரியாதையுடன் நடந்துக்கொள்ளுங்கள் “ என சமந்தாவிற்கு ஆதரவாக நின்றார். இந்த நிலையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது என கூறினால் அதற்கான காரணம் என்ன என்பதுதான் குழப்பமாக இருக்கிறது என நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)