(Source: ECI/ABP News/ABP Majha)
South Actress Salary : நயன்தாரா டு ராஷ்மிகா.. உங்களுக்கு பிடிச்சவங்க சம்பளத்தை செக் பண்ணுங்க..
உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் தென்னிந்தியாவில் இருந்து வந்த சமீபத்திய படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய சினிமா உண்மையிலேயே வளர்ந்து வருகிறது
தென்னிந்திய படங்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பாக்ஸ் ஆபிஸில் அண்மைக்காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. RRR, KGF சேப்டர் 2 மற்றும் சமீபத்தில் வெளியான விக்ரம் போன்ற திரைப்படங்கள் கோடிகளை சம்பாதித்து புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை செய்துள்ளன. உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் தென்னிந்தியாவில் இருந்து வந்த சமீபத்திய படங்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய சினிமா உண்மையிலேயே வளர்ந்து வருகிறது என்று சொல்வதில் தவறில்லை. இன்று நாம் தென்னிந்திய சினிமாவைப் பற்றி பேசுவதால், இங்கே பெண் நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் எனத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
சமீபத்தில் நடிகரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் திருமணம் செய்துகொண்டார் நயன்தாரா. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திப்படி, தனது சம்பளத்தைப் பொறுத்தவரை, நயன்தாரா ஜெயம் ரவியுடன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ரூ.10 கோடி சம்பளம் பெற இருக்கிறார்.
சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா: தி ரைஸ் படத்தில் ஒரு சூப்பர்ஹிட் பாடலில் காணப்பட்டார். இந்தியா டுடே ரிப்போர்ட்படி, பேக் டு பேக் ஹிட்கள் மற்றும் அவரது ஓ ஆண்டாவா பாடல் ஏகபோக ஹிட் ஆனதாஅல், அவர் இப்போது ஒரு படத்திற்கு ரூ 3 கோடி முதல் ரூ 5 கோடி வரை சம்பளம் கேட்கிறார் எனக் கூறப்படுகிறது.
View this post on Instagram
கடைசியாக ஆச்சார்யா படத்தில் நடித்த பூஜா ஹெக்டே தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பூரி ஜெகநாத்தின் அடுத்த ஜன கண மன படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் இவரது சம்பளம் ஐந்து கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
மற்றொரு ஊடக செய்தியின்படி, புஷ்பா: தி ரைஸ் படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு படத்திற்கு ரூ.3 கோடி வசூலிக்கிறார்.
View this post on Instagram