Watch Video: மணிமேகலை, ஜெய், அம்ருதா, சாக்ஷி.. அரபிக்குத்து போட்டு அசால்ட் செய்யும் நடிகர்கள்..
அரபிக்குத்து பாடலுக்கு குக்வித்கோமாளி மணிமேகலை, நடிகர் ஜெய், நடிகைகள் அமிர்தா உள்ளிட்டோர் ஆடிய குத்தாட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இந்தப்படத்தின் பின்னணி வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் முன்னதாகவே சன்பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கிய நிலையில், முதற்கட்டமாக வெளியிடப்பட்ட போஸ்டர் இணையத்தை அதகளப்படுத்தியது. அதனைத்தொடர்ந்து படத்திலிருந்து ஒரு ஸ்டில், பின்னர் படம் வெளியிடப்படும் மாதம் என அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்.
இந்த குஷியை கொண்டாடி முடிப்பதற்குள், படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிட்டது.
சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் வரிகளை எழுத, இன்னொரு பக்கம் தனக்கான ஸ்டைலில் விஜய் குத்தாட்டம் போட, பாடல் தற்போது தாறுமாறு கிட். வெளியான 10 மணிநேரத்தில் 16 மில்லியன்களை கடந்த இந்தப்பாடல், இதுவரை ஒரே நாளில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடல் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.
View this post on Instagram
சமூகவலைதளவாசிகள் அனைவரும் சங்கமிக்கும் பாடலாக மாறியிருக்கும் இந்தப்பாடலில் விஜய் ஆடுவது போலவே, பலரும் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தப்பட்டியலில் ஏற்கனவே, பூஜா ஹெக்டே, நெல்சனின் மகன் ஆத்விக் உள்ளிட்ட பலர் இருக்கும் நிலையில், தற்போது அந்தப்பட்டியலில் நடிகர் ஜெய், அமிர்தா, டிவிப்புகழ் மணிமேகலை, நடிகை சாக்ஷி உள்ளிட்டோரும் இணைந்திருக்கின்றனர்.
இதில் சாக்ஷி பாடலில் வருவது மாதிரியான ஆடையை அணிந்து, இதனை எத்தனை பேருக்கு பிடித்திருக்கிறது என்று இன்ஸ்டாவில் பதிவையும் தட்டிவிட்டிருக்கிறார்.
View this post on Instagram
மணிமேகலை டான்ஸ்: -
View this post on Instagram
நடிகை சாக்ஷி டான்ஸ்:-
View this post on Instagram
நடிகர் ஜெய் மற்றும் நடிகை அமிர்தா டான்ஸ்:-
View this post on Instagram