Watch Video : மழலையில் இப்படி.. வைரலாகும் சைஃப் அலிகான் மகன் சாராவின் வீடியோ..
தனுஷ் நடித்த அத்ரங்கி ரே படத்தின் கதாநாயகியான நடிகை சாரா அலி கானின் குழந்தைப்பருவ வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தனது குழந்தை சாரா அலிகானுடன் விளையாடும் வீடியொ இணையதளத்தின் வைரலாகி வருகிறது. தனது தந்தையைப் போல் இன்று ஒர் பெரிய நட்சத்திரமாக இருக்கும் சாரா அலி கானை ஒரு சின்ன விளையாட்டுக் குழந்தையாக இந்த வீடியோவில் பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளார்கள் ரசிகர்கள்.
சாரா அலி கான்
நடிகர் சைஃப் அலிகானின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் நடிகையாக சாரா அலிகான் அறிமுகமானார். 2018 ஆம் ஆண்டு அவரின் முதல் படமாக கேதர்நாத் வெளியானது. இந்த படத்தில் தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக சாரா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் சிம்பா, அன்பு ஆஜ் கல், கூலி நம்பர் 1, அத்ராங்கி ரே, கேஸ்லைட், சாரா ஹட்கே ஜரா பச்கே ஆகிய படங்களில் சாரா அலிகான் நடித்துள்ளார்.
இதில் அட்ராங்கி ரே தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதில் நடிகர் தனுஷூம் நடித்திருந்தால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே சாரா அலிகானுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஷூட் வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.
சுட்டி குழந்தையாக சாரா
Baby #SaraAliKhan with father #SaifAliKhan. pic.twitter.com/bQqoawk7mq
— Bollywoodirect (@Bollywoodirect) July 16, 2023
இன்று பாலிவுட்டில் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் சாரா அலிகான் குழந்தையாக இருந்தபோது தனது தந்தையுடன் படப்பிடிப்புத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு தனது தந்தையுடன் மழலை மொழியில் பேசி விளையாடியவாறு ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
குடும்பப் பின்னணி
நடிகர் சைஃப் அலிகான் மற்றும் அவரது முதல் மனைவியான அம்ரிதா சிங் ஆகிய இருவரின் மகள் சாரா அலி கான். இருவேறு மதத்தைச் சேர்ந்த பெற்றோரைக் கொண்டிருப்பதால் ஹிந்து மற்றும் இஸ்லாமிய கோயில்களுக்கு செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் சாரா அலி கான். இதன் காரணத்தினால் அடிக்கடி சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட குழுவினர் அவரை விமர்சித்தும் வருகிறார்கள். இந்த விமர்சனங்களுக்கு செவிசாய்க்காமல் தன் மனதிற்கு பிடித்ததை தைரியமாக செய்துவருகிறார் சாரா.
“ஒரு இந்து கோயிலுக்கு போகும் அதே மனநிலையில் தான் ஒரு இஸ்லாமியக் கோயிலுக்கும் நான் செல்வேன். என்னுடைய வேலையில் என்னை விமர்சித்தீர்கள் என்றால் நான் அதற்காக வருத்தப்படுவேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்திற்காக என்னை விமசித்தால் அதற்கான நான் ஏன் வருத்தப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டது இணையதளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.