Watch Video Sai Pallavi: ஜப்பானில் ஜாலி நடனமாடிய சாய் பல்லவி: வைரலாகும் டான்ஸ் வீடியோ!
ஜப்பானில் நடிகை சாய் பல்லவி நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜப்பானில் ஷாருக் கான் பாடல் ஒன்றுக்கு நடிகை சாய் பல்லவி நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சாய் பல்லவி
பிரேமம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. விபூதி வைத்த நெற்றி, அழகான பல் வரிசை, பேசும் தமிழ் என தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்னும் பல ஆண்டுகள் நிரந்தர க்ரஷ்ஷாக இருக்க அனைத்து சாத்தியங்களும் அவருக்கு உண்டு.
நடிகையாக மட்டுமில்லை, தனது நடனத்தின் மூலமாகவும் எல்லாருக்கும் அவர் ஷாக் கொடுத்திருக்கிறார். “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக நிறைவு செய்தவர் சாய் பல்லவி. ரவுடி பேபி பாடலில் தனுஷூடன் அவர் ஆடிய ஆட்டம், இன்னும் யூடியூபில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. சமீபத்தில் சாய் பல்லவி தனது தங்கையின் திருமண நிச்சயத்தில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து அவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து ஜப்பானில் அவர் தனது படக்குழுவுடன் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஏக் தின்
Sai Pallavi is all set to make her debut in Bollywood with Aamir Khan's son Junaid Khan. The Natural Star actress was seen dancing her heart out at the Japan schedule wrap of 'EkDin'.#SaiPallavi #AamirKhan #JunaidKhan #EkDin #Bollywood pic.twitter.com/fhepwqkEaj
— cine_sdn (@sdn789_) March 9, 2024
சாய் பல்லவி தற்போது அமீர் கான் மகன் ஜூனைத் கானுடன் ஏக் தின் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் சாய் பல்லவி. இப்படத்தின் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற்று வந்தது.
படப்பிடிப்பு தளத்தில் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டு வந்தார். தற்போது ஏக் தின் படத்தின் ஜப்பான் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக வகையில் படக்குழு ஜப்பானில் நடனமாடிக் கொண்டாடி உள்ளார்கள். இதில் நடிகை சாய் பல்லவி தனது படக்குழுவுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஷாருக் கான் நடித்த உயிரே பாடலில் தையா தையா பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார்
#EkDin movie team dancing for Sharukh khan's Chaiyya Chaiyya song in Japan schedule wraps up party 😍❤️🔥#SaiPallavi #JunaidKhan pic.twitter.com/LqVDSDnSPC
— Sai Pallavi (@Sai_PallaviFans) March 8, 2024