மேலும் அறிய

கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!

மயிலாடுதுறை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்த கேஸ் ஸ்டவ் பழுதுநீக்கும் தொழிலாளியை, அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அடுத்த அகரகீரங்குடி முட்டம், சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 42). இவர் அப்பகுதியில் கேஸ் ஸ்டவ் (எரிவாயு அடுப்பு) பழுது நீக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று சிலம்பரசன் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரிடம் அநாகரிகமான முறையில் பாலியல் சீண்டலில் (Sexual Harassment) ஈடுபட்டுள்ளார். இதனால் நிலை குலைந்த அந்தச் சிறுமி, அதிர்ச்சியிலும் பயத்திலும் சத்தம்போட்டு கூச்சல் எழுப்பியுள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்த கொடூரன்

சிறுமி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சிலம்பரசன், தனது குட்டு வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தில் சிறுமியை கடுமையாக மிரட்டியுள்ளார். "இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் உன்னைக் கொன்று விடுவேன்" என சிறுமிக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை வீட்டில் உள்ளவர்களிடமோ அல்லது வேறு யாருடமோ சொல்லக் கூடாது என பயமுறுத்தி அங்கிருந்து அனுப்பியுள்ளார்.

தாயிடம் கதறிய சிறுமி

சிலம்பரசனின் மிரட்டலால் மிரண்டுபோன அந்தச் சிறுமி, பயத்தில் அழுதுகொண்டே தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறுமி நீண்ட நேரமாக அழுது கொண்டிருப்பதையும், பதற்றமாக இருப்பதையும் கண்ட அவரது தாயார், அவரிடம் கனிவோடு விசாரித்துள்ளார். அப்போது, தனக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் தொல்லை குறித்தும், சிலம்பரசன் விடுத்த கொலை மிரட்டல் குறித்தும் அழுதுகொண்டே தாயாரிடம் சிறுமி விவரித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோரியும், குற்றவாளிக்கு உரிய தண்டைனை பெற்றுத்தர வேண்டும் என்றும் முடிவு செய்தார். உடனடியாக அவர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

போலீசாரின் அதிரடி நடவடிக்கை மற்றும் கைது

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் மகளிர் போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிலம்பரசன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது முதற்கட்டமாக உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் மீதான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டமான போக்சோ (POCSO - Protection of Children from Sexual Offences Act) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் சிலம்பரசன் மீது வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, தலைமறைவாக முயன்ற சிலம்பரசனை மகளிர் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

நீதிமன்றக் காவல் மற்றும் சிறைவாசம்

கைது செய்யப்பட்ட கேஸ் ஸ்டவ் தொழிலாளி சிலம்பரசனை, போலீசார் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் (Mayiladuthurai Court) ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட சிலம்பரசனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, போலீஸார் சிலம்பரசனை சிறையில் அடைத்தனர்.

பெற்றோர்களுக்குக் காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

"குழந்தைகளிடம் ஏற்படும் திடீர் மாற்றங்களை பெற்றோர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். யாராவது தவறான முறையில் தொட்டாலோ அல்லது மிரட்டினாலோ உடனடியாகப் பெற்றோரிடம் கூற வேண்டும் என்ற விழிப்புணர்வை குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி உடனடியாகப் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகளின் பெற்றோர்களிடையே சற்றே நிம்மதியை ஏற்படுத்தியிருந்தாலும், இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் தொடர்ந்து நிகழ்வது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Pune Murder Case: புனே கொடூரம்: ஹுடியால் சிக்கிக் கொண்ட கொலையாளி? 20 வயது பெண்ணின் கொடூர ஸ்கெட்ச்!
Pune Murder Case: புனே கொடூரம்: ஹுடியால் சிக்கிக் கொண்ட கொலையாளி? 20 வயது பெண்ணின் கொடூர ஸ்கெட்ச்!
PUNE MURDER : நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
சொந்த குழந்தையை கொன்ற தாய்... 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு
சொந்த குழந்தையை கொன்ற தாய்... 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு
தாத்தா வயதில் இப்படியொரு கொடூர புத்தியா? 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தட்டிக்கேட்ட வர்களுக்கு கத்திக்குத்து..
தாத்தா வயதில் இப்படியொரு கொடூர புத்தியா? 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தட்டிக்கேட்ட வர்களுக்கு கத்திக்குத்து..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
TNEA 2026: தள்ளிப்போகும் பொறியியல் சேர்க்கை; புது தரவரிசைப் பட்டியல் தேதியை அறிவித்த அமைச்சர்
TNEA 2026: தள்ளிப்போகும் பொறியியல் சேர்க்கை; புது தரவரிசைப் பட்டியல் தேதியை அறிவித்த அமைச்சர்
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
பட்ஜெட் விலை! ஒரே சார்ஜில் 120 கிலோமீட்டர் மைலேஜ் - Kinetic Green Flex இ ஸ்கூட்டர் வாங்கலாமா?
பட்ஜெட் விலை! ஒரே சார்ஜில் 120 கிலோமீட்டர் மைலேஜ் - Kinetic Green Flex இ ஸ்கூட்டர் வாங்கலாமா?
காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
Gold and silver rate today : உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
Embed widget