மேலும் அறிய

வைரல் சினிமா விமர்சகர் சத்யேந்திரன் காலமானார்..உறவினர்களுக்காக மருத்துவமனையில் காத்திருக்கும் உடல்

Sathyendran passed away : யூடியூபில் தனது திரைப்பட விமர்சனங்களால் பிரபலமாக அறியப்பட்ட சத்யேந்திரன் இன்று காலமானார்

யூடியூபில் பல்வேறு திரைப்படங்களுக்கு விமர்சனம் அளித்து பரவலாக கவனமீர்த்தவர் சத்யேந்திரன். நடிகராக வேண்டும் என்கிற கனவில் சென்னை வந்த சத்யேந்திரன் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் வசித்து வந்தார். சத்யேந்திரன் இன்று சென்னையில் உடல் நலக் குறைவால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

யார் இந்த சத்யேந்திரன் ?

எடிட்டர் லெனின் இயக்கிய knock out குறும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இறந்துபோனவராக சத்யேந்திரன் நடித்தார் . இந்த கதாபாத்திரத்திற்காக அவருக்கு பல அங்கீகாரங்கள் கிடைத்தன. சத்யேந்திரன் ச8 மொழிகளில் சுமார் 175 படங்கள் வரை நடித்துள்ளார். 6 மெகா சீரியல்களில் , ஒரு ஹாலிவுட் திரைப்படம் , ஒரு ஜெர்மன் மொழி படத்தில் நடித்துள்ளார் . கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். பகுதி நேரமாக ஜெர்மன் மொழி ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சத்யேந்திரன் கன்னட மொழியில் இளங்கலை பட்டம் பெற்றவர். கல்லூரி காலத்தில் நிறைய புத்தகங்கள் வாசிப்பதும் பல்வேறு உலக மொழி படங்களை பார்ப்பதும் பழக்கமாக கொண்டிருந்தார். கிரிஷ் கர்னாட் இயக்கிய நாடகத்தில் நடித்துள்ளார். 1978 ஆம் ஆண்டு கன்னடத்தில் கிரஹனா என்கிற படத்தில் சத்யேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

இந்த படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு தேடி சென்னை வந்தார். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் படத்தில் ரகுவரனின் ரூம் மேட்டாக இவர் நடித்திருந்தார். ஜெர்மன், பிரென்ச், ஜப்பானிய மொழி, இந்தி, தமிழ் & ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். சென்னையில் எந்த இடத்தில் உலக திரைப்படங்கள் திரையிடப்பட்டாலும் அங்கு சத்யேந்திரனை நிச்சயம் நாம் பார்க்கலாம். சமீபத்தில் இவர் லியோ மற்றும் பிற கமர்சியல் படங்களுக்கு அளித்த விமர்சனங்கள் வைரலாகின. இத்தனை வயதிலும் சத்யேந்திரன் சினிமாவின் மீது கொண்டிருந்த ஆர்வத்தை அனைவரும் பாராட்டினார்கள். சத்யேந்திரன் இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன பெங்களூருவில் உள்ள அவரது உறவினர்களை இதுவரை தொடர்புகொள்ள முடியாததால், அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget