Hrithik Roshan: ஹ்ரித்திக் ரோஷனை லவ் பண்ணதால் வேலை தர மாட்டேங்கறாங்க.. காதலி சபா ஆஸாத் பேச்சால் அதிர்ச்சி!
Hrithik Roshan Girl Friend: பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனை காதலிப்பதால் தனக்கு திரைப்படங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாக சபா ஆஸாத் வேதனைத் தெரிவித்துள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன்
முன்னணி பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் (Hrithik Roshan) மற்றும் அவரது மனைவி சூஸன் கடந்த 2014ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். இதன் பிறகு ஹ்ரித்திக் ரோஷன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பாடகி மற்றும் வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் சபா ஆஸாதை காதலித்து வருகிறார். இருவரும் பல ஆண்டுகளாக காதல் உறவில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், ஹ்ரித்திக் ரோஷனை காதலிக்கும் காரணத்தினால் தனக்கு திரைப்படங்களில் டப்பிங் வாய்ப்புகள் குறைந்து வருவதாக சபா ஆஸாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகரை காதலித்தால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சபா ஆஸாத் இப்படி கூறியுள்ளார். “முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு 6 படங்கள் வரை வாய்ஸ் ஓவர் கொடுப்பேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எனக்கு பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் வரவில்லை. இத்தனைக்கும் நான் இந்த வேலையை விட்டுவிட்டதாக அறிவிக்கவும் இல்லை, அல்லது அதிகம் சம்பளம் கேட்டதோ இல்லை. சமீபத்தில் இயக்குநர் ஒருவர் நான் ஹ்ரித்திக் ரோஷனுடன் காதல் உறவில் இருப்பதால் இனிமேலும் இந்த மாதிரியான வேலைகளை செய்ய மாட்டேன் என்று அவர் நினைத்துவிட்டதாக சொன்னார்.
வெளி உலகத்தில் முற்போக்கான ஒருவர் என்று அறியப்படும் ஒருவர் தான் என்னைப் பற்றி இவ்வளவு ஆணாதிக்க மனநிலையில் இருந்து யோசித்திருக்கிறார். ஒரு பிரபல நடிகரை காதலித்தால் ஒரு பெண்ணுக்கு சொந்தமாக சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்காதா? அவளுடைய வீட்டு வாடகைக்கும் உணவுக்கும் அவர் சம்பாதிக்க வேண்டாமா? தான் செய்யும் வேலையை நினைத்து பெருமைப்பட மாட்டார்களா? இதை எல்லாம் யோசிக்காத அளவிற்கு நாம் இன்னும் கற்காலத்தில் தான் வாழ்கிறோமா?
#SabaAzad took to social media to reveal how she lost voice over jobs due to her relationship with #HrithikRoshan.#Celebs #News pic.twitter.com/JnRj38Urh3
— Filmfare (@filmfare) June 14, 2024
இந்த மாதிரியான தவறான புரிதல் காரணமாக எனக்குப் பிடித்த வேலையை செய்யும் வாய்ப்பை நான் இழக்கிறேன். இரு வேறு மனிதர்கள் ஒரு காதல் உறவில் இருக்கும்போது அவர்கள் தங்களது தனித்துவத்தை எந்த வகையிலும் இழப்பதில்லை. தங்கள் வேலைகளை, தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு அதே நேரம் தங்களது துணைவருக்கும் ஆதரவாக அவர்களால் இருக்க முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் “ என்று அவர் தெரிவித்துள்ளார்.