மேலும் அறிய

S.A. Chandrasekar : கடைசி மூச்சுவரை வெற்றி கலைஞனாக இருப்பேன்... மக்கள் ஆதரிக்கவேண்டும்... எஸ்.ஏ.சி வெளியிட்ட அறிக்கை

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள 71வது திரைப்படமான 'நான் கடவுள் இல்லை' நாளை வெளியாகும் தருணத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். சட்டம் சம்பந்தமாகவும் அதில் உள்ள ஓட்டைகளை சுட்டிக்காட்டும் திரைப்படங்களுக்கும் பெயர் போனவர் இயக்குநர் எஸ்.ஏ.சி. அவரின் 71 வது படைப்பாக பிப்ரவரி 3ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'நான் கடவுள் இல்லை'. இப்படம் குறித்த அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார் எஸ்.ஏ.சி. அதன்படி அவரின் கடைசி மூச்சு உள்ள வரையில் வெற்றி கலைஞனாக இருக்க வேண்டும் என்பது தனது ஆசை என தெரிவித்துள்ளார். 

S.A. Chandrasekar : கடைசி மூச்சுவரை வெற்றி கலைஞனாக இருப்பேன்... மக்கள் ஆதரிக்கவேண்டும்... எஸ்.ஏ.சி வெளியிட்ட அறிக்கை

எஸ்.ஏ.சி 71 வது திரைப்படம் :

1981ம் ஆண்டு வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். சினிமாவில் அவர் அடியெடுத்து வைத்து 40 ஆண்டுகளை கடந்து பின்பும் இன்றும் அதே வேகத்துடனும், உற்சாகத்துடனும் இயங்கி வருகிறார். அதற்கு உதாரணம் தான் நாளை அவர் இயக்கத்தில் வெளியாகும் 71 வது திரைப்படம் "நான் கடவுள் இல்லை". 

மகனின் முதல் ரசிகன் :

மகன் விஜயை ஒரு டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மகனின் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் அவரின் விருப்பப்படியே நடிகனாக்கினார். விஜய்யை வைத்து ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார் எஸ்.ஏ.சி. விஜய்யின் சிறப்பான நடிப்பு, கடினமான உழைப்பை பார்த்து ஏராளமான தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்புகளை குவிக்க இன்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் இளைய தளபதி  என கொண்டாடப்படுகிறார். தனது மகனுக்கு தானே முதல் ரசிகனாக இருந்து ரசிகர் மன்றத்தை தொடங்கினார் எனவும் சொல்லப்படுவதுண்டு. இன்று அது மக்கள் இயக்கமாக வளர்ந்து பலருக்கும் பல நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

கடைசி மூச்சு வரை வெற்றி கலைஞன் :

இப்படி தனது ஒவ்வொரு அடியிலும் மகிழ்ச்சியை அனுபவித்த எஸ்.ஏ.சி பயணம் நான்கு சுவருக்குள் முடங்கி விடக்கூடாது என்பதால் இன்றும் இளைஞர்களுக்கு இணையாக ரேஸில் பயணித்து கொண்டு இருக்கிறார். அந்த பயணத்தின் விளைவு தான் நாளை வெளியாக இருக்கும் ' நான் கடவுள் இல்லை ' திரைப்படம். 40 ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் உழைப்பு எந்த அளவில் இருந்ததோ அது சற்றும் குறைவில்லாமல் 71வது திரைப்படத்திலும் தொடர்வது சிறப்பு. இதுவே ஆசை. கடைசி மூச்சு வரை ஒரு வெற்றி கலைஞனாக இருக்க வேண்டும் என்கிறார்.

ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள 'நான் கடவுள் இல்லை' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

MK Stalin: “பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“ - கடுமையாக விமர்சித்த முதல்வர்
“பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“ - கடுமையாக விமர்சித்த முதல்வர்
Trump Modi: ”அடிக்கலாம், அடிக்காமலும் போகலாம்” - மீண்டும் மோடியை மதிக்காமல், அசிங்கப்படுத்திய? ட்ரம்ப்
Trump Modi: ”அடிக்கலாம், அடிக்காமலும் போகலாம்” - மீண்டும் மோடியை மதிக்காமல், அசிங்கப்படுத்திய? ட்ரம்ப்
IND vs ENG Test: இங்கிலாந்தை கலங்கடிக்குமா இந்தியா? கோட்டை விட்ட கோலி, ரோகித் - சாதிப்பாரா சுப்மன் கில்?
IND vs ENG Test: இங்கிலாந்தை கலங்கடிக்குமா இந்தியா? கோட்டை விட்ட கோலி, ரோகித் - சாதிப்பாரா சுப்மன் கில்?
Trump Vs Putin: “நீ முதல்ல உன் முதுக பாரு“; புதினுக்கு ட்ரம்ப் கொடுத்த நக்கலான பதில் - எதுக்கு தெரியுமா.?
“நீ முதல்ல உன் முதுக பாரு“; புதினுக்கு ட்ரம்ப் கொடுத்த நக்கலான பதில் - எதுக்கு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: “பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“ - கடுமையாக விமர்சித்த முதல்வர்
“பாஜக அரசுக்கு தமிழ் என்றால் கசப்பு, தமிழர்கள் என்றால் வெறுப்பு“ - கடுமையாக விமர்சித்த முதல்வர்
Trump Modi: ”அடிக்கலாம், அடிக்காமலும் போகலாம்” - மீண்டும் மோடியை மதிக்காமல், அசிங்கப்படுத்திய? ட்ரம்ப்
Trump Modi: ”அடிக்கலாம், அடிக்காமலும் போகலாம்” - மீண்டும் மோடியை மதிக்காமல், அசிங்கப்படுத்திய? ட்ரம்ப்
IND vs ENG Test: இங்கிலாந்தை கலங்கடிக்குமா இந்தியா? கோட்டை விட்ட கோலி, ரோகித் - சாதிப்பாரா சுப்மன் கில்?
IND vs ENG Test: இங்கிலாந்தை கலங்கடிக்குமா இந்தியா? கோட்டை விட்ட கோலி, ரோகித் - சாதிப்பாரா சுப்மன் கில்?
Trump Vs Putin: “நீ முதல்ல உன் முதுக பாரு“; புதினுக்கு ட்ரம்ப் கொடுத்த நக்கலான பதில் - எதுக்கு தெரியுமா.?
“நீ முதல்ல உன் முதுக பாரு“; புதினுக்கு ட்ரம்ப் கொடுத்த நக்கலான பதில் - எதுக்கு தெரியுமா.?
Operation Sindhu: ரைட், ஆப்ரேஷன் சிந்துவை தொடங்கிய இந்தியா - முதல் பேட்ச்சில் 110 பேர், டெல்லியில் லேண்டிங்
Operation Sindhu: ரைட், ஆப்ரேஷன் சிந்துவை தொடங்கிய இந்தியா - முதல் பேட்ச்சில் 110 பேர், டெல்லியில் லேண்டிங்
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு  தமிழிழும் அர்ச்சனை செய்யப்பட்டு நடத்தப்படும் - அமைச்சர் சேகர் பாபு !
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு  தமிழிழும் அர்ச்சனை செய்யப்பட்டு நடத்தப்படும் - அமைச்சர் சேகர் பாபு !
Lexus LX 500d: இப்படியும் ஒரு காரா? கோடிகளில் விலை, நிரம்பி வழியும் புக்கிங் - இனி ஆஃப்-ரோட்னா லெக்சஸ் தான்
Lexus LX 500d: இப்படியும் ஒரு காரா? கோடிகளில் விலை, நிரம்பி வழியும் புக்கிங் - இனி ஆஃப்-ரோட்னா லெக்சஸ் தான்
"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
Embed widget