Dhanush: ஹலோ தமிழ் ஃப்ரண்ட்.. தனுஷை டேக் செய்த ரூசோ பிரதர்ஸ்.. வைரலாகும் ட்வீட்..!
நெட்ஃபிளிக்ஸ் பதிவிட்ட ட்விட்டிற்கு ரூசோ பிரதர்ஸ் தனுஷை டேக் செய்த ட்விட் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்ஃபிளிக்ஸ் பதிவிட்ட ட்விட்டிற்கு ரூசோ பிரதர்ஸ் தனுஷை டேக் செய்த ட்விட் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்ஃபிளிக்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தி கிரே மேன் படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ‘ஹலோ மை செக்ஸி தமிழ் ஃப்ரண்ட்’ என்று பேசும் போட்டோவை பகிரப்பட்டு, உங்களது நண்பரை டேக் செய்யுங்கள் என்று பதிவிடப்பட்டிருந்தது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த, ரூசோ பிரதர்ஸ் நடிகர் தனுஷை டேக் செய்திருக்கிறார்கள். இந்தப்பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
. @dhanushkraja https://t.co/R1xGYFSMp6
— Russo Brothers (@Russo_Brothers) July 22, 2022
அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் கேப்டன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோய் ருசோ, ஆண்டனி ரூசோ ( ரூசோ பிரதர்ஸ்) இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ தி கிரே மேன்’. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறார் தனுஷ். இவருடன் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப்படம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடித்தளத்தில் வெளியிடப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள், தனுஷ் சிறிது நேரமே வந்தாலும், அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
முன்னதாக, இந்தப்படத்தின் பிரோமோஷனுக்காக ஹாலிவுட் சென்றிருந்த தனுஷ், தனது மகன்களான யாத்ரா, லிங்கா ஆகிய இருவரையும் அழைத்து சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது.
View this post on Instagram
இந்தப்படத்தின் முதல் காட்சி அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ் உட்பட படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது தனுஷிடம் ருசோ பிரதர்ஸ் இயக்கத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமானது எப்படி இருக்கிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ், “ இந்தப்படத்திற்கு நான் எப்படி தேர்வானேன் என்பதே தெரியவில்லை” என்று கூறினார். இதைக்கேட்ட மொத்த அரங்கமும் சிரிப்பலையில் மூழ்கியது.
மேலும் பேசிய தனுஷ், “ காஸ்டிங் ஏஜன்சி என்னை தொடர்பு கொண்டு, ஹாலிவுட் படம் ஒன்று இருக்கிறது என்றனர்... நான் ஓகே என்றேன்... இது மிகப் பெரிய படம் என்றார்கள்.. அதற்கும் நான் ஓகே என்றேன்... உடனே அதில் நடிப்பதற்கு உங்களின் அனுமதி வேண்டும் என்றார்கள்... நான் என்ன படம் என்று கேட்டேன்.. ஆனால் அதற்கு அவர்கள் பதில் சொல்லாமல், தொடர்ந்து இது பெரிய படம் என்றார்கள்.. நான் ஒப்புக்கொள்ள வில்லை.. உடனே அவர்கள் பெருமூச்சு விட்டனர்” என்றார். தொடர்ந்து பேசிய தனுஷ், “ ருசோ பிரதர்ஸில் பெரிய ஃபேன்” என்றார்.