RRR:ஆப்பிரிக்காவில் ஷூட்டிங்: வருகிறது ஆர்.ஆர்.ஆர் இரண்டாம் பாகம் - அப்டேட் கொடுத்த ராஜமௌலி தந்தை!
RRR: ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆப்பிரிக்காவில் படமாக்கப்பட உள்ளதாக எஸ்.எஸ். ராஜமெளலியின் தந்தை விஜயேந்திட பிரசாத் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆப்பிரிக்காவில் படமாக்கப்பட உள்ளதாக எஸ்.எஸ். ராஜமெளலியின் தந்தை விஜயேந்திட பிரசாத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் ஹங்கமாவிற்கு அளித்த பேட்டியில், ஆர்.ஆர்.ஆர். படத்தின் 2-ம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,. அதற்கு பதிலளித்த அவர்,ஆர்.ஆர்.ஆர். படம் வெளியானதற்கு பிறகு, ராஜமெளலியிடன் கதை தொடர்ச்சிக்கான ஐடியாவை பகிர்ந்து கொண்டதாகவும், ஆப்பிரிக்காவை கதைக்களமாக கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர். படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியிலாக பெரும் சாதனை படைத்தது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினார்கள். தொடர்ந்து 2-வது பாகம் ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இது தொடர்பாக ராஜமெளலியிடமும் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. ஆனாலு, இதுவரை 2-பாகம் தொடர்பான எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், ராஜமெளலியின் தந்தை,திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆர்.ஆர்.ஆர். படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.
ஆர்.ஆர்.ஆர். படத்தின் 2-ம் பாகம் வெளிவருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இந்தநிலையில் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் 2-ம் பாகத்துக்கு திட்டமிடப்பட்டு உள்ளதாக விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் 2-ம் பாகம் உருவாக்கும் திட்டம் உள்ளது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். 2-ம் பாகம் படத்திலும் நடிப்பார்கள். ஹாலிவுட் தரத்தில் இந்த படம் இருக்கும். முன்னணி ஹாலிவுட் பட நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராஜமெள்லி அல்லது அவரின் மேற்பார்வையில் வேறு யாராவது இயக்கும் வாய்ப்பு இருக்கிறது.' என்றார்
ஆனாலும், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் 2-வது பாகம் தயாரிப்பு தொடரப்படலாம், இல்லாமலும் போகலாம் என்ற பதிலையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இப்போது ராஜமெளலி ப்ரு புராஜெக்ட்டில் பிளியாக இருக்கிறார். அப்படி இருக்கையில், அவர் இது தொடர்பாக எதுவும் சிந்திக்க மாட்டார்,. எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு வேலையில் ஈடுபடும் சமயத்தில் மற்ற திட்டங்களில் கவனம் செலுத்தும் பழக்கம் என் மகனுக்கு இல்லை.நான் ஏற்கனவே அவரிடம் இரண்டாம் பாகத்திற்கான ஐடியா பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதோடு, ராம் சரண், என்.டி.ஆர். இருவரிடமும் சொல்லியிருக்கிறேன். இருவருக்கும் பிடித்திருந்தால், ராஜமெளலிக்கும் கதை பிடிக்குமாயின் நிச்சயம் ஆர்.ஆர்.ஆர். இரண்டாம் பாகம் சாத்தி;யம். அதுவும். இரண்டு ஹீரோக்களுடன் ஆப்பிரிக்காவில் படம் எடுக்க தயார். ”என்று விஜயேந்திர பிரசாத் பாலிவுட் ஹங்கமாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
ஆர்.ஆர்.ஆர். இரண்டாம் பாகத்தை ஹாலிவுட் இயக்குநர் இயக்குவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் பிரசாத் மஹா நியூஸ் செய்திதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக கடந்தாண்டு நவம்பரில் சிகாகோவில் ஆர்.ஆர்.ஆர். பட திரையிடல் நிகழ்வில் கேட்டதற்கு, “ எனக்கும் ஆர்.ஆர்.ஆர். இரண்டாம் பாகம் எடுப்பதில் விருப்பம் இருக்கிறது. ஆனால், என்னால் இது தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில், என் திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியரான அப்பாவே இது தொடர்பாக சொல்ல முடியும்.” என்று சொல்லியிருந்தார்.
கடந்தாண்டு இந்திய திரையுலகின் பிரபல இயக்குநர் என அழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கீரவாணி இசையமைத்த இப்படத்தில் “நாட்டு நாட்டு” பாடலின் காட்சியமைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் சமீபத்தில் கோல்டன் குளோப் விருதையும், சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதையும் நாட்டு நாட்டு பாடல் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது.