RRR படத்தின் OTT ரிலீஸ் எப்போ தெரியுமா? - படக்குழுவினர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
RRR என்னும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கான ஓடிடி வெளியீட்டு உரிமையை ZEE5 மற்றும் Netflix ஆகிய இரண்டு நிறுவனங்களும் பெற்றுள்ளன.
பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராஜ மெளலி இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் RRR. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக இந்தத்திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. தியேட்டரிகளில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கவே, படக்குழுவினருக்கு இன்ப அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
#ரத்தம்ரணம்ரவுத்திரம் முன்னோட்டம்https://t.co/YTETJXbOt4#RRRMovie @ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @mmkeeravaani @aliaa08 @RRRMovie @LycaProductions
— Madhan Karky (@madhankarky) December 9, 2021
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. என்னதான் படம் திரையரங்கில் வெளியானாலும் , ஓடிடியில் திரைப்படம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் படம் எப்போது ஓடிடி-யில் வெளியாகும் என்ற கேள்வி முன் வைக்கப்பட்ட நிலையில் படக்குழுவினர் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளனர். ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 90 நாட்களுக்கு பிறகு அதாவது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில்தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. RRR என்னும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கான ஓடிடி வெளியீட்டு உரிமையை ZEE5 மற்றும் Netflix ஆகிய இரண்டு நிறுவனங்களும் பெற்றுள்ளன. இதில் நெட்ஃபிளிக்ஸ் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் படத்தை வெளியிட, ZEE5 இந்தியில் படத்தை வெளியிடும் என தெரிகிறது.
Covering 3 Languages Press meets in a Single Day is as Crazier as they are !!!
— RRR Movie (@RRRMovie) December 10, 2021
That’s our R.R.R🤎🧡❤️#RRRMovie #RRRTrailer pic.twitter.com/ddxVNF2f2Z
ஆர்.ஆர்.ஆர் படத்தின் புரமோஷன் வேலைகள் தற்போது மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் படம் எவ்வளவு நீளம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதில், 184. 54 நிமிடங்கள் ஓடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படம் 3 மணி நேரம் 5 நிமிடம் ஓடும் எனத் தெரிய வந்துள்ளது. கீரவாணி இசையமைத்துள்ள இந்தப்படத்தில், செந்தில் குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கொரோனா ஊரடங்களால் வெளியீடு தாமதமான படங்களில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ஒன்று. படம் தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் உள்ள முக்கியமான திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகுதான் படத்தை வெளியிடுவேன் என உறுதியாக இருந்தார் ராஜமௌளி .