Rohini about Raghuvaran : ’என்னம்மா இப்படி திருக்குறள் சொல்றான்னு சொன்னார்’ : ரகுவரன் குறித்து பேசிய ரோகிணி
நடிகர் ரகுவரன் இன்று உயிருடன் இருந்தால் தனது மகன் ரிஷிவரனை எப்படி ரசித்து இருப்பார் என்பதை வெளிப்படுத்தினார் நடிகை ரோகினி.

தமிழ் சினிமாவின் தரமான வில்லன் எந்த அந்தஸ்தை பெற்றவர் நடிகர் ரகுவரன். தனது தனித்துமான குரலால் தமிழக மக்களை கவர்ந்த இவர் வில்லனாக மட்டுமின்றி ஏராளமான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அணைத்து மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரகுவரன் - ரோகினி திருமண வாழ்க்கை :
நடிகை ரோகினி நடிப்பு மட்டுமின்றி பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் என பல திறமைகளை உள்ளடக்கிய பன்முக கலைஞர். நடிகர் ரகுவரனுக்கும் நடிகை ரோகினிக்கும் இடையே காதல் ஏற்கப்பட்டு இருவரும் 1996ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். குடி போதைக்கு அடிமையான நடிகர் ரகுவரன் 2006ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.
நடிகர் ரகுவரன் - நடிகை ரோகினி தம்பதியினருக்கு சாய் ரிஷிவரன் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவருக்கு இப்போது 24 வயதாகிறது. சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் நடிகை ரோகினி தனது மகன் ரிஷிவரன் பற்றின தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார். " ரிஷிக்கு என்னை போலவே தமிழ் மீது மிகுந்த ஈடுபாடு மற்றும் ஆர்வம். சிறு வயதிலேயே திருக்குறளை நன்றாக சொல்லக்கூடியவர் ரிஷி.
Coffee with mommy pic.twitter.com/Ts6JWAURmt
— Rohini Molleti (@Rohinimolleti) May 23, 2022
மகனை ரசித்த தந்தை :
நான்காவது வகுப்பு படிக்கும் சமயத்தில் திருக்குறள் சொல்ல வேண்டும் என்றால் ரிஷியை தான் பள்ளியில் அழைப்பார்கள். மூன்று நான்கு திருக்குறளை அழகாக மனப்பாடம் செய்து கடகடவென ஒப்பித்துள்ளான். ஒருமுறை நானும் ரகுவும் அவனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றோம். அப்போது ரிஷி திருக்குறள் சொல்வதை பார்த்த ரகு இவ்வளவு அழகாக திருக்குறள் சொல்றானே மா என்றார். நான் தான் அவனுக்கு சொல்லிக்கொடுத்தேன் என்றேன். திருக்குறள் இவ்வளவு அழகாக சொல்கிறான் என்ன அன்று சொல்லிய அந்த ரகு இப்போது இருந்து இருந்தால் ரிஷியை பார்த்து எப்படி ரசித்து இருப்பார் எப்படி பெருமைப்பட்டு இருப்பார் என்பதை நினைக்கும் போது அது மிகவும் வலி தர கூடிய விஷயமாக இருக்கிறது" என்றார் ரோகினி.
அச்சு அசலாக தந்தையை போலவே இருக்கும் சாய் ரிஷிவரன் எப்போது நடிக்க வருவார் என்பது ரகுவரனின் தீவிர ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

